SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்டாளை பெருமைப்படுத்துவதே நோக்கம்: வைரமுத்து விளக்கம்

2018-01-14@ 05:36:07

சென்னை: ஆண்டாளை பெருமைப்படுத்துவதே நோக்கம் என வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அந்த கட்டுரையை முழுவதையும் படித்தால்தான், என் கட்டுரை யார்  மனதையும் புண்படுத்தாது என்று புரியும்.தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் மிக மிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை. கடவுளுக்கு மட்டுமே சேவை செய்ய தம் மொத்த வாழ்க்கையும் ஒப்படைத்த பெண்களுக்கே தேவரடியார் அல்லது தேவதாசி என்ற  திருப்பெயர்கள் வழங்கப்பட்டன. பின்னாளில் தேவதாசி என்ற உயர் பொருள் நிலவுடைமை சமூகத்தால் பொருள்மாற்றம் பெற்றது.

ஆண்டாளை பற்றி அரிய நூல்களை படித்து தகவல் திரட்டிய நான் ‘Indian movements: some aspects of dissent, protest and reform’ என்ற சுபாஷ் சந்திர மாலிக் தொகுத்து அமெரிக்காவின்  இண்டியானா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ஆங்கில ஆராய்ச்சி கட்டுரை தொகுப்பு நூலையும் படித்தேன். அதில் தென்னிந்தியாவில் பக்தி இயக்கம் என்ற கட்டுரை இருந்தது. அதில், இந்திய வரலாற்று ஆய்வு மன்ற  தலைவராக இருந்த பேராசிரியர் நாராயணன் எழுதிய ஒரு வரியைத்தான் நான் மேற்கோளாக எடுத்திருந்தேன். அவர்கள் தேவதாசியை எப்படி உயர்ந்த பொருளில் கொண்டிருந்தார்களோ அதே பொருளில்தான்  கையாண்டிருக்கிறனே். 46 ஆண்டாக தமிழோடு வாழ்ந்து வரும் நான், என்னை உயர்த்திய தமிழ்ச்சமூகத்தை புண்படுத்துவேனா? ஆண்டாள் தமிழை வணங்குபவன் நான் என தெரிவித்துள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்