SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகம் முழுவதும் கைவரிசை மாத வாடகைக்கு ஒப்பந்தம் பேசி 230 காரை விற்று நூதன மோசடி: டிராவல்ஸ் அதிபர் தலைமறைவு

2018-01-14@ 02:11:08

கும்பகோணம்: தமிழகம் முழுவதும் 230 பேரிடம் வாடகைக்கு கார் வாங்கி உரிமையாளருக்கு தெரியாமல்  அடகு வைத்து நூதன மோசடி செய்த டிராவல்ஸ் அதிபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா கொல்லுமாங்குடி கும்பகோணம் சாலையில் வசிப்பவர் முகமது நசுருதீன் (42). இவர் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தெற்கு வீதியில் கடந்த நவம்பர் மாதம் டிராவல்ஸ் தொழிலை தொடங்கினார். இதற்காக பல்வேறு அறிவிப்புகளை கொடுத்து, வாடகைக்கு கார்களைவிட ஒப்பந்த அடிப்படையில் கார்கள் தேவை என அறிவித்திருந்தார்.

இதனை நம்பிய 20க்கும் மேற்பட்ட கார் உரிமையாளர்கள் தங்களது கார்களை 11 மாத ஒப்பந்த அடிப்படையில் கொடுத்தனர். ஒவ்வொரு மாதம் 15ம் தேதிக்குள் காரின் வாடகைக்கான பணம் உரிமையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் டிசம்பர் 15ம் தேதிக்கான வாடகை தொகை எந்தவொரு கார் உரிமையாளரின் வங்கி கணக்கிலும் வந்து சேரவில்லை. இதனால் நசுருதீனின் 3 செல்போன் எண்களுக்கும் தொடர்பு கொண்டு வாடகை பணம் கேட்டுள்ளனர். அவர் நேரில் வந்து வாங்கி கொள்ளும்படி கூறியுள்ளார். அதன்படி சாரங்கபாணி தெற்கு வீதிக்கு சென்று பார்த்தபோது அலுவலகம் பூட்டியிருந்தது. அப்பகுதியில் விசாரித்தபோது நாச்சியார்கோவிலுக்கு அலுவலகத்தை மாற்றிவிட்டதாக கூறினர். அங்கு சென்று பார்த்தபோது, நசுருதீன் தலைமறைவானது தெரியவந்தது. ஏமாற்றம் அடைந்த கார் உரிமையாளர்கள்  தமிழ்ஒளி, மதிவாணன் உட்பட பலர் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்துள்ளனர்.

 இதுகுறித்து  போலீசார் கூறியதாவது: நசுருதீன் மீது கும்பகோணத்தில் மட்டும் 23 கார் உரிமையாளர்கள் புகார் கொடுத்துள்ளனர்.  கார்களின் மதிப்பு ₹1 கோடிக்கு மேல் இருக்கும். கார்களை மாத வாடகைக்கு பேசி அடகு வைத்தும், விலைக்கு விற்றும் அவர் மேசாடி செய்துள்ளார். அதிமுக பிரமுகரிடம்,  நசுருதீன் பாதுகாப்பாக இருப்பது  விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் இருக்கும் இடம் தெரிந்துவிட்டதால் இன்னும் ஓரிரு நாளில் கைது செய்து அனைத்து கார்களையும் மீட்டெடுப்போம்.கும்பகோணத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் 230 கார்களை ஏமாற்றி அடகு வைத்தும், குறைந்த விலைக்கு விற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. அரசியல் கட்சியினர்தான் இத்தகைய கார்களை வாங்கியுள்ளதாக தெரிகிறது. இதன்பின்னணியில் அரசியல்வாதிகள்,  கார் விற்கும் புரோக்கர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்