SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனவெறி குறித்த விமர்சனம் டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும்: 55 ஆப்ரிக்க நாடுகள் தீர்மானம்

2018-01-14@ 01:10:53

நைரோபி: இனவெறி குறித்து விமர்சனம் செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என 55 ஆப்ரிக்க நாடுகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.வெளிநாடுகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் அகதிகளாக பலர் குடியேறி வருகின்றனர். அது குறித்த ஆய்வு கூட்டம் வெள்ளை மாளிகையில் நடந்தது. செனட் உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்ட  இக்கூட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் ஹைதி மற்றும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்து அகதிகளாக குடியேறியவர்கள் குறித்து டிரம்ப் பேசினார். அப்போது ‘மிகமோசமான  அருவருக்கத்தக்க நாடுகளில் இருந்து வருபவர்களை நாம் ஏன் வரவேற்க வேண்டும்? அவர்களால் அமெரிக்க பொருளாதாரம் எந்த விதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது? எனவே, அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்’’  என்றார்.

அவருடைய இந்த பேச்சுக்கு அவருடைய ஆளும் குடியரசு கட்சி மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். இந்நிலையில், ஆப்பிரிக்க யூனியனில் உள்ள 55 நாடுகளும்  டிரம்பின் இந்த பேச்சுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளன. இதுதொடர்பாக ஆப்ரிக்க நாடுகள் யூனியன் கூட்டமைப்பு சார்பில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர், அமெரிக்க அதிபர் டிரம்பை கண்டித்து தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. இதில் 55 நாடுகளின் தூதர்களும் கையெழுத்து போட்டுள்ளனர். அந்த தீர்மானத்தில், ‘டிரம்பின் பேச்சில் இனவெறி தெரிகிறது.

அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரது விமர்சனம் மிகவும்  கவலையை ஏற்படுத்தி உள்ளது. அவரது மூர்க்கத்தனமான இனவெறி மிகுந்த கருத்துக்கு நாங்கள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஆப்ரிக்க நாடுகள் கூட்டமைப்பு தலைவர் எப்பா கலோண்டா கூறுகையில், ‘‘டிரம்பின் விமர்சனம் நிச்சயம் இனவெறி மிகுந்தது. இதனால் நாங்கள் இன்னும் வலுவடைந்து உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.,

டிரம்ப் மறுப்பு
இனவெறி பேச்சு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,’ நான் அப்படிப்பட்ட வார்த்தையை உபயோகப்படுத்தவில்லை. மேலும், எனது பேச்சில் உள்நோக்கம் எதுவும் இல்லை’  என கூறியுள்ளார்.

ஜநா கண்டனம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுக்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐநாவின் மனித உரிமை அலுவலக செய்தி தொடர்பாளர் ரூபர்ட் கால்விலி கூறுகையில், ‘‘டிரம்ப்பின் பேச்சு அதிர்ச்சியாகவும்,  அவமானமாகவும், இனவெறி மிக்கதாகவும் இருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-01-2018

  21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • Hungarystudentsstruggle

  ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

 • colambiaparaglidingworldcup

  கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

 • turkey_dust_storm

  துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • republic_vilaaa

  குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்