SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாதுகாப்புக்கு 3000 போலீசார் குவிப்பு சபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை

2018-01-14@ 01:10:52

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை இன்று நடக்கிறது. அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். நெய்யபிஷேகம் 10.30 மணிவரை நடக்கும். பின்னர் மகரவிளக்கு  பூஜைக்கு முன்னதாக நடத்தப்படும் சிறப்பு பூஜைகள் துவங்கும். பிற்பகல் 1.47 மணியளவில் மகரசங்கிரம பூஜை நடக்கும். பிற்பகல் 2 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். இதன் பிறகு பக்தர்கள் 18ம் படியேற  அனுமதிக்கப்படமாட்டார்கள். பின்னர் திருவாபரண ஊர்வலம் செல்லும்வரை பம்பையில் இருந்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படமாட்டார்கள். இதற்கிடையே பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திருவாபரண ஊர்வலம் இன்று பிற்பகல் 3 மணியளில் பம்பை  செல்லலும்.  அங்கிருந்து  6.20 மணியளவில் திருவாபரணம் சன்னிதானத்தை அடையும். பின்னர் ஐயப்பன் விக்ரகத்தில் திருவாபரணம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும். தொடர்ந்து ெபான்னம்பலமேட்டில் 3 முறை  மகர ஜோதி தெரியும்.

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஜோதி தென்படும் இடங்களில் எல்லாம் குடில்கள் அமைத்து தங்கியுள்ளனர். இதனால் பாதுகாப்பிற்காக 3000க்கு மேற்பட்ட  ேபாலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலமாகவும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 20ம் தேதிவரை கோயில் நடை திறந்திருக்கும். ஆனால் 19ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள்  தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்