SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

2018-01-14@ 01:08:59

டுனெடின்: பாகிஸ்தான் அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், 183 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. டுனெடின் பல்கலை. ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 257 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கப்தில் 45, கேப்டன் வில்லியம்சன் 73, ராஸ் டெய்லர் 52, லாதம் 35 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹசன் அலி, ரும்மான் ரயீஸ் தலா 3, ஷதாப் கான் 2, பாஹீம் அஷ்ரப் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 27.2 ஓவரிலேயே வெறும் 74 ரன்னுக்கு சுருண்டது.

ரும்மான் ரயீஸ் 16, முகமது ஆமிர் 14, பாஹீம் 10, கேப்டன் சர்பராஸ் அகமது ஆட்டமிழக்காமல் 14 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர் (3 பேர் டக் அவுட்). நியூசிலாந்து பந்துவீச்சில் டிரென்ட் போல்ட் 7.2 ஓவரில் 1 மெய்டன் உட்பட 17 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். கோலின் மன்றோ, பெர்குசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். போல்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நியூசி. ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றிய நிலையில், 4வது போட்டி ஹாமில்டன் செடான் பார்க் மைதானத்தில் 16ம் தேதி நடக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • womenrallyUS

    அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பு: 3 லட்சம் பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி

  • delhi_fire_17dead

    டெல்லியில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து: 17 பேர் உடல் கருகி பலி

  • kabul_terror_43

    காபுலில் சொகுசு ஓட்டலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு : பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

  • Christiansmanila

    மணிலாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித நீர்தெளிப்பு திருவிழா : ஏராளமானோர் பங்கேற்பு

  • 22-01-2018

    22-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்