SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோவாளையில் பூக்கள் விலை உயர்வு மல்லிகை கிலோ 3 ஆயிரம்

2018-01-14@ 01:07:14

ஆயிரம்நாகர்கோவில்: தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.  தோவாளை  பூ சந்தைக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டம், வெளி ஊர்  மற்றும் உள்ளூர்களில் இருந்தும் பல  வகையான வாசனை பூக்களும், பல வண்ண  பூக்களும் விற்பனைக்கு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடும்  பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூவின் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது.  தினமும்  மல்லிகை பூ சுமார் 5 டன்னுக்கு மேலாக வரத்து இருந்த நிலையில்  தற்போது 1 டன்னாக குறைந்துள்ளது.

 பொங்கல் பண்டிகைக்காக பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலையும்  உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று மல்லிகை (கிலோ) 3,000, பிச்சி ₹1,200,  முல்லை 1,200, சம்பங்கி 250, கனகாம்பரம் 1,300, கொழுந்து 120,   மரிகொழுந்து 120,  பாக்கெட் ரோஸ் 50, பட்டன் ரோஸ் 50, ஸ்டெம்பு  ரோஸ் 200, மஞ்சள் கேந்தி 30, ஆரஞ்சு கேந்தி 60க்கு  விற்கப்பட்டது. வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறையும் என  வியாபாரிகள் தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • womenrallyUS

    அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பு: 3 லட்சம் பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி

  • delhi_fire_17dead

    டெல்லியில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து: 17 பேர் உடல் கருகி பலி

  • kabul_terror_43

    காபுலில் சொகுசு ஓட்டலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு : பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

  • Christiansmanila

    மணிலாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித நீர்தெளிப்பு திருவிழா : ஏராளமானோர் பங்கேற்பு

  • 22-01-2018

    22-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்