SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐசிசி யு-19 உலக கோப்பை பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

2018-01-14@ 01:07:13

வாங்கரெய்: இளைஞர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் டி பிரிவு லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. வாங்கரெய் கோபாம் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 47.4 ஓவரில் 188 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் ரோகைல் நசீர் 81 ரன், அலி ஆசிப் 30, முகமது டாஹா 17, கேப்டன் ஹசன் கான் 13, அர்ஷத் இக்பால் 10 ரன் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் அஸ்மதுல்லா ஓமர்சாய், குவாயிஸ் அகமது தலா 3, நவீன் உல் ஹக் 2, ஜாகிர் கான், நிசார் வாக்தாத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 50 ஓவரில் 189 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. அந்த அணி 47.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்து வென்றது. ரகமதுல்லா குர்பாஸ் 31, இக்ராம் அலி 46, டார்விஷ் ரசூலி 76*, நிசார் 19, அஸ்மதுல்லா 12* ரன் எடுத்தனர். ரசூலி ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆப்கானிஸ்தான் அணி 2 புள்ளிகள் பெற்றது.

* பாப்புவா நியூ கினியா அணியுடன் நடந்த பி பிரிவு லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. நியூ கினியா 20 ஓவரில் 95 ரன்னுக்கு ஆல் அவுட்; ஜிம்பாப்வே 14 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 98 (டாலர் 41*, வெஸ்லி மாதவெரே 53*).

* நமீபியா அணிக்கு எதிரான சி பிரிவு லீக் ஆட்டத்தில் வங்கதேசம் 87 ரன் வித்தியாசத்தில் வென்றது. மழையால் பாதிக்கப்பட்ட இப்போட்டியில் வங்கதேசம் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுக்க, நமீபியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 103 ரன் எடுத்து தோல்வியை தழுவியது.

* வெஸ்ட் இண்டீசுடன் நடந்த போட்டியில் (ஏ பிரிவு), நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 233/8 (கீகன் சிம்மன்ஸ் 92*, கிமானி மெலியஸ் 78, அலிக் அதானேஸ் 26); நியூசிலாந்து  39.3 ஓவரில் 234/2 (ஜேக்கப் புலா 83, ரவீந்திரா 16, பின் ஆலன் 115*, போஷர் 8*).

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • womenrallyUS

    அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பு: 3 லட்சம் பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி

  • delhi_fire_17dead

    டெல்லியில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து: 17 பேர் உடல் கருகி பலி

  • kabul_terror_43

    காபுலில் சொகுசு ஓட்டலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு : பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

  • Christiansmanila

    மணிலாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித நீர்தெளிப்பு திருவிழா : ஏராளமானோர் பங்கேற்பு

  • 22-01-2018

    22-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்