SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளிமாநிலம் செல்லும் பொருட்களுக்கு பிப்ரவரி முதல் இ-வே பில் கட்டாயம்: 16ம் தேதி முதல் தன்னார்வ நடைமுறை

2018-01-14@ 01:07:13

கோவை: ஜி.எஸ்.டி.,நடைமுறையால் வர்த்தக பொருட்களை பிற மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் இ-வே பில் கட்டாயமாகிறது. இ-வே பில் இல்லாமல் செல்லும் சரக்குகள் பறிமுதல் செய்யப்பட  உள்ளது. இ-வே பில் நடைமுறையை வணிகர்கள் வரும் 16ம் தேதி முதல் தன்னார்வமாக மேற்கொள்ள மாநில ஜிஎஸ்டி அலுவலகத்தினர் அறிவுறுத்தி வருகின்றனர். ஜிஎஸ்டி விதிமுறைகளின்படி ஒருபொருள் உற்பத்தி   செய்யப்படும் இடத்தில் இருந்து வெளியே செல்லும்போதே அதற்கான ஜிஎஸ்டி வரியை  செலுத்தி விட வேண்டும். அந்த பொருள் வினியோகஸ்தர்களுக்கோ, நுகர்வோர்களுக்கோ  விற்கும்போது தான் அந்த நிறுவனம் செலுத்திய  ஜிஎஸ்டி வசூலிக்க முடியும்.  சரக்குகள் உற்பத்தியான இடத்தில் இருந்து லாரி கிளம்பும் முன் ஆன்லைனில்   பதிவு செய்யப்பட்ட ‘இ-வே பில்’லை தயார் செய்து கைவசம் வைத்திருக்க  வேண்டும்.

 ஜிஎஸ்டி பறக்கும்படையினர் வழியில் சரக்கு லாரிகளை தடுத்து  நிறுத்தும்போது இ-வே பில்லை காண்பிக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்துவதில்  உற்பத்தியாளர்களுக்கு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டது. இதனால்  கடந்த 6 மாதமாக இ-வே பில் நடைமுறை நாடு முழுவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. வரும் பிப்ரவரி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாக வணிகர்கள் வரும் 16ம் தேதி முதல்  தன்னார்வமாக இ-வே பில் நடைமுறையை கடைப்பிடிக்கும்படி மாநில ஜிஎஸ்டி அலுவலகம் (வணிகவரி) சார்பில் அறிவுறுத்தப்பட்டுவருகிறது.இதுகுறித்து கோவை கோட்ட மாநில ஜிஎஸ்டி அலுவலகம் தரப்பில் கூறியதாவது:  கடந்தஆண்டு ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து, வணிகவரி சோதனை சாவடி அகற்றப்பட்டன. வணிகவரி பதிவெண் பெற்றவர்கள் ஜிஎஸ்டி பதிவெண்ணிற்கு மாற வழிகாட்டப்பட்டனர். கோவை,  திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் உள்ள 6 வணிக வரி மாவட்டங்களில் உள்ள 45 சர்க்கிள்களில் பறக்கும்படை சோதனை கடந்த ஜூலை முதல் நிறுத்தப்பட்டது. வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் இ-வேல் பில்லுடன்  ரூ.50 ஆயிரம் மதிப்பிற்கு மேற்பட்ட சரக்குகள் பிற மாநிலங்களுக்கு செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், மீண்டும் பறக்கும் படை ஆய்வு நடைமுறைக்கு வருகிறது. இ-வே பில்லை கம்ப்யூட்டர் மூலமோ, செல்போனிலோ  உருவாக்க முடியும்.

 அதை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக கோவை கோட்டத்தில் உள்ள வணிகர்கள், பட்டய கணக்காளர்கள், விற்பனை வரி ஆலோசகர்கள், சரக்கு லாரி அலுவலகத்தினர் ஆகியோருக்கு, சரக்குகளை கொண்டு  செல்லும்போது கொண்டு செல்லவேண்டிய இ-வே பில் தயாரிப்பது குறித்த பயிற்சி அளித்துள்ளோம். பிப்ரவரி 1ம் தேதி முதல் இ-வே பில் இல்லாமல் செல்லும் சரக்குகள் பறிமுதல் செய்யப்பட உள்ளது. அதை தொடர்ந்து  வணிகர்கள் வரும் 16ம் தேதி முதல் தாங்கள் பிற மாநிலங்களுக்கு அனுப்பும் ரூ.50 ஆயிரம் மதிப்பிற்கு மேற்பட்ட சரக்குகளுக்கு இ-வேல் பில்லுடன் செல்லும் நடைமுறையை தன்னார்வமாக மேற்கொள்ளும்படி  அறிவுறுத்தியுள்ளோம்.இவ்வாறு கோவை கோட்ட மாநில ஜிஎஸ்டி அலுவலகம் (வணிகவரி) தரப்பில் கூறினர்.

* ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு, வணிகவரி சோதனை சாவடி அகற்றம்
* ஜிஎஸ்டியில் ₹50,000க்கு மேற்பட்ட சரக்குகளுக்கு பிப்ரவரி 1 முதல் இ-வே பில் கட்டாயம். இவை இல்லாத சரக்குகள் பறிமுதல் செய்யப்படும்.
* வரும் 16ம் தேதி முதல் வணிகர்கள் தாமாக முன்வந்து இ-வே பில் நடைமுறையை கடைப்பிக்க அறிவுறுத்தல்.
* இ-வே பில்லை கம்ப்யூட்டர் மூலமோ, செல்போனிலோ உருவாக்க முடியும். இதற்காக பயிற்சி தரப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

  • madurai_meenut11

    மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

  • berlin_bomb_war

    இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

  • 10schooldata

    10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

  • governor_palace11

    பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்