SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விளைச்சல் குறைவால் விலை எகிறியது ஒரு கட்டு செங்கரும்பு 500

2018-01-14@ 01:07:12

சிவகங்கை: விளைச்சல் குறைவால் செங்கரும்பு விலை அதிகரித்துள்ளது. ஒரு கட்டு 500 வரை விற்கப்படுகிறது.சிவகங்கை அருகே சாலூர், மலம்பட்டி, சிவல்பட்டி, சாணிப்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் செங்கரும்புகள் விளைவிக்கப்படுகின்றன. இப்பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய மழை இல்லை.  இதனால் கிணற்று பாசனம் மூலமே கரும்பை விளைவித்து வருகின்றனர். இங்கு விளையும் கரும்புகள் சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் என தமிழகம் முழுவதும் விற்பனைக்காக கொண்டு  செல்லப்படுகிறது.நடப்பாண்டில் கரும்பு விவசாயம் மிகக்குறைவான அளவே செய்யப்பட்டது. இதனால் ஒரு வண்டி கரும்பு (30 கட்டு), 5 ஆயிரம் வரை விலை வைக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டு கரும்பு (10 கரும்பு) 400 முதல் 500 வரை விற்பனை  செய்யப்படுகிறது. விலை அதிகம் உள்ளதால் ஒரு கட்டுக்கு பதில் சில கரும்புகளை மட்டும் பொதுமக்கள் வாங்கி வருகின்றனர்.

விவசாயிகள் கூறுகையில், ‘‘மழையை நம்ப முடியாததால் ஏராளமானோர் செங்கரும்பு விவசாயத்தை குறைத்து வருகின்றனர். மழை இல்லாமை, உரம், மருந்து விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் அதிகப்படியான செலவு  செய்ய வேண்டிய நிலை உள்ளது. உற்பத்தி செலவு அதிகமாகியுள்ளதால் கூடுதல் விலைக்கு விற்றால் மட்டுமே கட்டுப்படியாகும்,’’ என்றனர்.வியாபாரிகள் கூறுகையில், ‘‘கூடுதல் விலை வைத்து விற்றால் மட்டுமே எங்களுக்கு கட்டுப்படியாகும். கூடுதல் விலை கொடுத்து வாங்கி வாகன செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் சேர்த்தால் எங்களுக்கு  குறைவான லாபம் மட்டுமே கிடைக்கும். கடைசி நேரத்தில் சற்று விலை குறைத்து விற்க வாய்ப்புள்ளது,’’ என்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

  • CapeTownWaterCrisis

    வரலாறு காணாத வறட்சியால் கேப் டவுனில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் பரிதவிப்பு

  • NCCcampnirmala

    டெல்லியில் என்சிசி மாணவ-மாணவிகள் முகாம் : நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்

  • 23-01-2018

    23-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்