SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவேரிப்பாக்கம் அருகே பொங்கல் விற்பனைக்கு குவியும் வாழைத்தார்: அறுவடையில் மும்முரம் காட்டும் விவசாயிகள்

2018-01-14@ 01:07:11

காவேரிப்பாக்கம்: பொங்கல் விற்பனைக்காக காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் வாழைத்தார் அறுவடையில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் வாழை சாகுபடியே பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இங்கிருந்தே சென்னை, காஞ்சிபுரம், ஓசூர், பெங்களூரு மற்றும் வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் வாழை இலை, வாழை மரம்,  வாழைத்தார், வாழை தண்டு, வாழைப்பூ, வாழைக்கன்றுகள் ஆகியன அனுப்பி வைக்கப்படுகின்றன. வாழைக்கு அடுத்தபடி நெல் அதிகளவில் காவேரிப்பாக்கம், நெமிலி, பனப்பாக்கம் வட்டாரங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.

  ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யக்கூடிய தோட்டப்பயிர் என்பதால் விவசாயிகளுக்கு நிரந்தர வருவாயை தரக்கூடிய பயிராகவும் வாழை உள்ளது. ஒரு ஏக்கருக்கு ₹40 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் வரை செலவாகும்  என்கின்றனர் விவசாயிகள். தற்போது ெபாங்கல் திருநாளை முன்னிட்டு வாழை இலை கட்டு ₹400, வாழைத்தார் ₹150, வாழைத்தண்டு ₹20, வாழைப்பூ ₹10க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை  முன்னிட்டு வியாபாரிகள் வாழை அறுவடையில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் வட்டார விவசாயிகள் கூறுகையில், ‘நெல் சாகுபடி பணியில் கூலி ஆள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் விவசாயிகள் வருடாந்திர  பயிரான வாழையை பயிர் செய்து வருகின்றனர். இதனை  வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர்.

 மழைக்காலங்களில் வாழை மரம் சேதம் ஏற்படாமல் இருந்தால் வாழை விவசாயிகளுக்கு நல்ல பலன் கொடுக்கும். நெல் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளதுபோல், வாழை மரம், வாழை இலை,  வாழை தண்டு, உள்ளிட்டவைகளை விறபனை செய்ய இப்பகுதியில் ஒரு விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும்’ என்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

  • CapeTownWaterCrisis

    வரலாறு காணாத வறட்சியால் கேப் டவுனில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் பரிதவிப்பு

  • NCCcampnirmala

    டெல்லியில் என்சிசி மாணவ-மாணவிகள் முகாம் : நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்

  • 23-01-2018

    23-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்