SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுருங்கியது சாகுபடி பரப்பளவு : அரசு, தனியார் ஆலைகளின் மெத்தனத்தால் ஆந்திராவுக்கு கரும்பு அனுப்பும் விவசாயிகள்

2018-01-14@ 00:58:43

சேலம்: தமிழகத்தில் தனியார் சர்க்கரை ஆலைகள் வைத்துள்ள ரூ.1500 கோடி நிலுவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்,  நடப்பாண்டு ஆலைகளுக்கு கரும்பு அனுப்புவதை விவசாயிகள் குறைத்துள்ளனர். இதனால் சர்க்கரை உற்பத்தி குறைந்து, விலை உயரும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், மதுரை, கரூர், புதுக்கோட்டை, தேனி மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 8.40 லட்சம் ஏக்கரில் கரும்பு சாகுபடி நடப்பது வழக்கம். இதை நம்பி, மூன்று லட்சம் விவசாயிகள் உள்ளனர். ஆனால், நடப்பாண்டில் 6.31 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி நடந்துள்ளது என்று மத்திய வேளாண்துறை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரும்புக்கான கொள்முதல் விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயம் செய்தாலும், கொள்முதலுக்கான பணத்தை வழங்காமல், தனியார் சர்க்கரை ஆலைகள் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கடந்த சில ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளை அலைக்கழித்து வருகிறது. ரூ.1500 கோடி வரை உள்ள  நிலுவைத்தொகை கேட்டு, விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நிலுவைத் தொகை பாக்கி இருப்பதால், குறைந்த பரப்பளவில் சாகுபடி செய்த கரும்பை தனியார் மற்றும் கூட்டுறவு ஆலைகளுக்கு கொடுக்காமல், ஆந்திராவுக்கு விவசாயிகள் அனுப்பி வருகின்றனர். பெரும்பாலான மாவட்டங்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலை  அதிகாரிகள், இதனை தடுத்து வருகின்றனர். இந்த நிலை நீடித்தால், சர்க்கரை உற்பத்தி குறைந்து விலை உயரும் அபாயம் உருவாகியுள்ளது.

இது குறித்து கரும்பு விவசாயிகள் கூறியதாவது: தமிழகத்தில் 16 கூட்டுறவு  சர்க்கரை ஆலைகள், 24 தனியார் சர்க்கரை ஆலைகள், 2பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் என மொத்தம் 42  சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் சர்க்கரை தயாரிக்க  தேவையான கரும்புகளை, விவசாயிகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கி வருகின்றனர்.  கரும்புக்கு எப்ஆர்பி எனப்படும் ஆதாய விலை, மத்திய அரசும், மாநில அரசும்  வழங்கி வருகிறது. அதன்படி, 2016-17 அரவை ஆண்டில் மத்திய அரசு ஒரு டன்  கரும்புக்கு ரூ.2,300 வீதமும், தமிழக அரசு ஆதாய விலையாக ரூ.550 வீதமும்  வழங்குவதாக அறிவித்தது. இதில், தமிழக அரசு நிர்ணயித்த ரூ.550 கோடி தொகையை,  தனியார் சர்க்கரை ஆலைகள் கடைசி வரை வழங்கவே இல்லை. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளாக, ரூ.1500 கோடி நிலுவையில் இருக்கிறது.

 நடப்பு (2017-18) அரவை ஆண்டு அரவை சீசன், கடந்த  அக்டோபர் மாதம் தொடங்கியது. நடப்பு அரவை ஆண்டிற்கான ஆதாய விலையை  மத்திய அரசு அறிவித்து விட்டது. ஆனால் மாநில அரசு ஆதாய  விலையை இன்னும் அறிவிக்கவில்லை. ஆலை அதிபர்களிடமிருந்து நிலுவைத் தொகையை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கவில்லை. வேறுவழியின்றி ஆந்திராவிற்கு கரும்பை அனுப்பும் நிலை உருவாகியுள்ளது. இதனால் சர்க்கரை உற்பத்தி குறைந்து விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில்  கரும்பு உற்பத்தி குறைந்ததால், சர்க்கரை உற்பத்தியும் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. 2011-12ம் ஆண்டு 21.3 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. 2016-17ம் ஆண்டு 9.6 லட்சம் டன் சர்க்கரை மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், சர்க்கரைக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலையும் கடுமையாக உயரும். இதை உணர்ந்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்