SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்துக்கு தண்ணீர் பிரச்னை என்றால் இரு தேசிய கட்சிகளும் மறைமுகமாக ஒன்று சேர்கிறது: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

2018-01-14@ 00:55:44

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்துக்கு ஏற்கனவே 81 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு கொடுக்க வேண்டும். உடனடியாக கனிசமாக தண்ணீர் வந்தால்தான் டெல்டா பகுதியில் காய்ந்து கருகி இருக்கும் சம்பா பயிர்களை காப்பாற்ற முடியும். இப்படிப்பட்ட  சூழ்நிலையில் தமிழக முதல்வர் கேட்டுள்ள 7 டிஎம்சி தண்ணீரை  கொடுக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.  

தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, பாஜ தலைமையிலான  மத்திய அரசு தண்ணீர் விஷயத்தில் தமிழக மக்களையும், விவசாயிகளையும் வஞ்சிக்கிறது.இருதேசிய கட்சிகளும் தமிழகத்துக்கு தண்ணீர் பிரச்னை என்றால் மறைமுகமாக ஒன்று சேர்கிறது.கர்நாடகத்துக்கு தேர்தல் என்றால்  தேர்தலுக்காக ஒரு அரசியல் நடக்கிறது. இது ஒருபோதும் ஏற்க முடியாது.. உடனடியாக தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி தண்ணீர் பெற்று தர  வேண்டும். என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tokyo_olympic_2020

    டோக்கியோ 2020 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னங்கள் வெளியீடு!!

  • kandhan_savadi11

    கந்தன்சாவடியில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விபத்து : 2 பேர் பலி ; பலர் படுகாயம்

  • LosAngelesSuperMarketshot

    லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சூப்பர் மார்க்கெட் கடைக்குள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

  • boataccident_19dead

    பிரான்சன் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி

  • intel_beer_fes

    சர்வதேச பீர் திருவிழா : கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் உடன் 1300 வகையான பீர்கள் விழாவில் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்