SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் பிழைப்புக்காக குவியும் வடமாநிலத்தவர்களால் அதிகரிக்கும் குற்றச்செயல்கள் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?

2018-01-14@ 00:55:09

வேலூர்: கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் வெளிமாநிலத்தவர்கள் என்றால் இங்கு நிரந்தரமாக வசிப்பவர்கள் மட்டுமே. அதிலும் கேரளம், ஆந்திரம், கர்நாடக, மகாராஷ்டிர மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே. இந்த நிலை இருந்த வரை வேலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, குற்றச்சசம்பவங்கள் என்பது இவர்களால் ஏதுமில்லை என்ற அளவில் இருந்தது. இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தில் திருப்பூர், கோவை, நீலகிரி, சேலம் உட்பட மாநிலம் முழுவதும் பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், உத்தரகாண்ட், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்தும் வேலையில்லா இளைஞர்கள், கூலித்தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர்.

முதலில் இவர்கள் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள பனியன் தொழிற்சாலைகளில் தஞ்சமடைந்தனர். இவர்கள் மூலமும், வேலூர் மாவட்டத்தில் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்பவர்கள் மூலமும் தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை அறியும் மேற்கண்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வேலூர் மாவட்டத்துக்கும், பிற மாவட்டங்களுக்கும் வந்து குவிந்து வருகின்றனர். இதுபோன்றவர்களால்தான் மாநிலத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் மெயின் பஜாரில் உள்ள நகை கடை ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் நகை கொள்ளை, தொடர்ந்து மெயின் பஜார், ஜெயராமசெட்டித்தெரு நகை கடைகளில் சுவரில் துளையிட்டு நடந்த நகை கொள்ளை, அண்ணா சாலையில் 2 சம்பவங்களில் கிலோ கணக்கில் நடந்த நகைகள் கொள்ளை, சமீபத்தில் ஆற்காடு சாலையில் காரில் இருந்த 2.5 கிலோ நகை மற்றும் பணம் கொள்ளை, கடந்த 3 மாதங்களில் தொடர்ச்சியாக ரயில்களில் நடந்த செயின் பறிப்பு சம்பவங்கள், செல்போன்கள் திருட்டு மற்றும் வீடு புகுந்து திருட்டு, கொலை, கொள்ளை என்று வேலூர் மாவட்டத்தில் மட்டும் வடமாநிலங்களை சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் நகை கடை ஒன்றில் கொள்ளையடித்த நகைகளுடன் வேலூர் வந்து இங்கிருந்து டாக்ஸி மூலம் ஆந்திரா செல்லும் வழியில் கார் டிரைவருக்கு ஏற்பட்ட சந்தேகமும், சாதுர்யமும் அவர்களை மாநில எல்லையில் போலீசாரின் சோதனை சாவடியில் காவலுக்கு இருந்த போலீசார் மூலம் சிக்க வைக்க முடிந்தது. இதே நிலை சென்னை தொடங்கி மாநிலம் முழுவதும் தொடர்ந்து  வருகிறது. வேலூர் மாவட்டம் உட்பட மாநிலம் முழுவதும் தற்காலிகமாக தங்கியுள்ள வடமாநிலங்களை சேர்ந்தவர்களின் விவரங்களை முழு அளவில் திரட்டி அவர்களை தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்க வேண்டும் என்றும், வடமாநிலங்களை சேர்ந்தவர்களை வேலையில் சேர்ப்பவர்களை இவ்விஷயத்தில் கூட்டு பொறுப்பாக்கி கண்காணிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் வடமாநிலங்களை சேர்ந்தவர்களால் ஏற்படும் குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

போட்டோவுடன் சான்று கட்டாயமாக்கணும்

தமிழகத்தில் தங்கியுள்ள வடமாநிலத்தை சேர்ந்தவர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து காவல்துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, ‘பிழைப்பை தேடி தமிழகத்திற்கு வரும் வடமாநிலத்தவர்கள், பெரிய அளவில் கல்வியறிவு இல்லாதவர்கள். ஆகவே, இவர்களிடத்தில் தன்னம்பிக்கையும் குறைவாகவே இருக்கிறது. இங்குள்ள தொழிற்சாலைகளில், கடினமான வேலைகளில்தான், வடமாநிலத்தவர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு வேலை நேரமும், வேலை நாட்களும் கூடுதலாகவே உள்ளது.

விபத்துகள் ஏற்பட்டால், பணம் கொடுத்து சமரசம் செய்து கொள்வதும் உண்டு. ஆகவே, மனஉளைச்சலுக்கு ஆளாகும் வடமாநில தொழிலாளர்கள் அதை தீர்க்க போதையை நாடுகின்றனர். போதை அதிகமாகி அதனால் ஏற்படுவதுதான் சட்டம் ஒழுங்கு பிரச்னை. ஆகவே, வடமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு போட்டோவுடன் கூடிய சான்று கட்டாயமாக்கப்பட்டால், அதனால் எழும் குற்றங்களை குறைக்கலாம்’ என்று கூறினர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்