SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாஸ்போர்ட்களில் குடும்ப விபரங்கள் உள்ள பக்கம் இனி இடம் பெறாது : மத்திய அரசு உத்தரவு

2018-01-14@ 00:53:34

நாகர்கோவில்: பாஸ்போர்ட்களில் குடும்ப விபரங்கள் இடம்பெறுகின்ற கடைசி பக்கம் இனி இடம்பெறாது. மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் இது தொடர்பான உத்தரவை பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு வழங்கியுள்ளது. பாஸ்போர்ட் நடைமுறைகள் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. 1989-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் பிறந்த தேதி சான்றிதழை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை அண்மையில் தளர்த்தப்பட்டது. மேலும் ஆதார் அட்டை, பான்கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல், விண்ணப்பதாரர் தாய் அல்லது தந்தையின் பெயரை குறிப்பிட விருப்பம் இல்லை என்று கூறினால் அவர்கள் அந்த பெயரை குறிப்பிட தேவையில்லை.

ஆனால் முன்பெல்லாம் தாய், தந்தை இருவரின் பெயரையும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த நிலையில் விண்ணப்பதாரரின் குடும்ப விபரங்கள் உள்ளிட்டவை அடங்கிய கடைசி பக்கத்தை பாஸ்போர்ட்களில் இனி காண இயலாது. இது தொடர்பான உத்தரவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. தந்தை பெயர், தாயார் பெயர், மனைவி/கணவர் பெயர், தற்போதுள்ள முகவரி ஆகியவையும், பைல் எண்ணும் கடைசி பக்கத்தில் இடம்பெற்றிருக்கும்.

தற்போது பாஸ்போர்ட் முதல்பக்கத்தில் விண்ணப்பதாரரின் பெயர், போட்டோ, கையெழுத்து, பிறந்த தேதி, பிறந்த இடம், பாஸ்போர்ட் எடுத்த இடம், பாஸ்போர்ட் எண் ஆகியன இடம்பெற்றிருக்கும். இனி குடும்ப விபரங்கள் வழக்கம்போல் சேகரிக்கப்பட்டு அவை பாஸ்போர்ட் அலுவலக மென்பொருளில் சேகரிக்கப்படும். பாஸ்போர்ட்டில் உள்ள எண் அடிப்படையிலேயே விமான நிலையங்களில் கூடுதல் விபரங்களை அதிகாரிகளால் சரிபார்த்துக்கொள்ள முடியும். அதே வேளையில் தற்போது இருப்பில் உள்ள பாஸ்போர்ட் புத்தகங்களில் கடைசி பக்கம் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. எனவே இருப்பில் உள்ள புத்தகங்கள் தீர்ந்த பின்னர் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்