SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொங்கல் விழாவை முன்னிட்டு அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு: 924 காளைகள், 624 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு

2018-01-14@ 00:45:18

அவனியாபுரம்: பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று மதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 924 காளைகள் பதிவாகி உள்ளன. மேலும் மாடுபிடி வீரர்கள் 624 பேரும்,  ஜல்லிக்கட்டில் களம் இறங்க தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும். மதுரை கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ், விருதுநகர்  எம்.பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.

அனுமதி டோக்கன் வழங்கப்பட்ட 924 காளைகளுக்கும் இன்று காலை 6 மணி முதல் மருத்துவ பரிசோதனை நடைபெறும். 10க்கும் மேற்பட்ட மருத்துவக்குழுவினர் காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்ய உள்ளனர். மாடுபிடி வீரர்களுக்கான உடல்தகுதி பரிசோதனை காலை 6 மணி முதல் நடைபெறும். 15க்கும் மேற்பட்ட மருத்துவக்குழுவினர், 624 வீரர்களுக்கும் பரிசோதனை செய்ய உள்ளனர். ஜல்லிக்கட்டை காண பல்லாயிரக்கணக்கானோர்  திரள்வார்கள் என்பதால், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.ஜல்லிக்கட்டு நடைெபறும் அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் சாலையில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 16 இடங்களில் பெரிய எல்இடி  திரைகள் அமைக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்