ஆதார் எண் கொடுக்காதவர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு துண்டிப்பு

2018-01-14@ 00:43:29

சென்னை: சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு மானிய தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை 2015ம் ஆண்டு முதல் படிப்படியாக மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இணைப்பு பெற்றுள்ள அனைவரும் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்த நிறுவனங்கள் வலியுறுத்தின. அதிலும் டிச.31ம் தேதிக்குள் ஆதார் எண் வழங்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் இந்த நிறுவனங்கள் எச்சரித்தன. இந்நிலையில், அரசின் எந்த திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.
அப்போது மத்திய அரசு தரப்பில், ‘ஆதார் எண் கட்டாயம் என்பதற்கான காலக்கெடுவை 2018 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக’ உறுதி அளித்தது. ஆனால், ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உட்பட அனைத்து மத்திய அரசு நிறுவனங்களும், மாநில அரசு நிறுவனங்களும் வலியுறுத்தி வருகின்றன. அதற்கு ஏற்ப, ஆதார் எண்ணை இணைக்காத வாடிக்கையாளர்களின் எரிவாயு இணைப்பை துண்டித்துள்ளது. இதுகுறித்து அந்த பகுதி முகவர்களிடம் கேட்டால், ‘ஆதார் எண் கொடுத்தால் ஒரு வாரத்தில் மீண்டும் இணைப்பு புதுப்பிக்கப்படும்’ என்று சொல்கின்றனர்.
மேலும் செய்திகள்
மக்களாட்சி மாண்புகளுக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுகிறார் : மு.க.ஸ்டாலின்
காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் சரத்குமார் உண்ணாவிரத போராட்டம்
ஆளுநரை திரும்ப பெறக்கோரி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது
குடும்ப உறவை கடந்து திவாகரனுடன் அரசியல் உறவு கிடையாது : டிடிவி தினகரன் பேட்டி
உரிமைகளுக்காக நடைபெறும் போராட்டங்களை அதிமுக அரசு ஒடுக்குகிறது : சீமான் கண்டனம்
3வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: 15 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி
தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு
துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்
சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு
இன்றைய சிறப்பு படங்கள்
ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்
LatestNews
மீண்டும் நடந்த சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு கஷ்டமாகவும், எளிதாகவும் இல்லை: மாணவர்கள் கருத்து
14:22
பேராசிரியை நிர்மலாதேவிக்கு மே 9-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14:09
ஜெ. ரத்த மாதிரிகள் உள்ளதா என நாளைக்குள் பதிலளிக்க அப்பல்லோவுக்கு ஐகோர்ட் கெடு
13:43
டிடிவி தினகரன்-திவாகரன் பங்காளிகள் சண்டை ஒரு நாடகம்: அமைச்சர் ஜெயக்குமார்
13:06
தென் தமிழக மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும்: வானிலை ஆய்வு மையம் அறிவுரை
12:50
ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
12:43