SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருள் நடமாட்டம் : நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

2018-01-14@ 00:38:20

சென்னை: மாணவர்களிடையே போதைப் பொருள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் அதனால்  போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த நடவடிக்கை மற்ற மாணவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்றும் போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் அருகே பான்பராக், பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனுவுக்கு டிஜிபி பதில் தருமாறு சில கேள்விகளை எழுப்பினார்.

அந்த கேள்விகளுக்கு பதிலளித்த டிஜிபி அனைத்து போலீசாருக்கும் உயர் நீதிமன்றத்தின் கேள்விகள் மற்றும் உத்தரவுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இருக்கும் இடத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திற்கு புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. அதுவும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த புகையிலை பொருட்களை விற்பனை செய்வது குற்றமாகும்.  அப்படி விற்பனை செய்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்கள் அருகே இதுபோன்ற புகையிலைப் பொருட்கள் விற்பதைத் தடுப்பதில் போலீசார் கவனமாக இருக்க வேண்டும். போதைப்பொருள்களை கடத்துவர்களைத் தடுக்க அனைத்து சோதனைச் சாவடிகளும் கண்காணிக்கப்பட வேண்டும்.  

மாவா, குட்கா, ஹன்ஸ் போன்ற புகையிலைப் பொருட்களை கொண்டு சென்ற வாகனங்கள் குறித்து போலீஸ் தரப்பில் அறிக்கை தரப்பட்டுள்ளது. அதிக அளவு கஞ்சாவை கடத்திச் சென்ற 2 பேர் கடந்த 2016 செப்டம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மது அருந்துவதும் ஹூக்கா புகைப்பதும் பல பப்புகளில் நடைபெற்று வருகிறது. அதுவும் சிறுவர்களுக்கு இந்த ஹூக்கா புகைக்க தருகிறார்கள் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. எனவே, தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் எத்தனை பப்புகள் உள்ளன?, அந்த பப்புகளில் சிறுவர்கள் புகைபிடிக்க அனுமதிக்கப்படுகிறதா?

அப்படியானால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?. சென்னையில் மட்டும் ஹூக்கா மையங்கள் மற்றும் ஹூக்கா பார்லர்கள் எத்தனை உள்ளன? என்பது குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் எத்தனை கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்? அப்படிப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?.  கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களே மாணவர்களுக்கு இந்த போதைப் பொருட்களை வாங்கிக்கொடுப்பதாக தகவல்கள் வந்துள்ளன. கான்பூர் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் இது சாதாரணமாக நடைபெற்று வருவதாக செய்திகள் வந்துள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது. இதை எல்லா கல்வி நிறுவனங்களும் கவனமாக பார்க்க வேண்டும். எனவே, அனைத்து மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவற்றின் நிர்வாகத்திற்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து விசாரணை நடத்தி குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து போலீசார் அடுத்த விசாரணையில் தெரிவிக்க வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற குற்றங்களில் மாணவர்கள் ஈடுபடாமல் காப்பாற்ற முடியும். எடுக்கும் நடவடிக்கை மற்ற மாணவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. விசாரணை வரும் வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பப்புகள் எண்ணிக்கை அதிகரிப்பு

பீர் உள்ளிட்ட மதுபானங்களை வாடிக்கையாளர்களுக்கு காக்டெய்ல் போன்ற முறைகளில் சர்வு செய்யும் பப்புகள் மும்பை பெங்களூர் போன்ற நகரங்களில்தான் இதுவரை அதிகமாக நடத்தப்பட்டு வந்தது. ஆனார், இந்த பப்புகள் தற்போது சென்னையில் பல இடங்களில் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பப்புகளில் ஹூக்கா என்ற புகை பைப் வைக்கப்பட்டுள்ளது. புகையிலையை ஹூக்கா பைப்பில் வைத்து அதில் நெருப்பை பற்றவைத்து குழாய் மூலம் புகைக்கும் முறை இது. பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மக்கள் வீடுகளில் இந்த ஹூக்காவை வைத்திருப்பார்கள். பின்னர் இது படிப்படியாக பப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹூக்கா புகைக்கும் பழக்கம் சென்னையில் உள்ள மாணவர்களிடையே பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

கஞ்சா விற்பனை அமோகம்

மதுரை மாவட்டத்தில் 345 கிலோ கஞ்சாவும், தேனி மாவட்டத்தில் 180 கிலோ  கஞ்சாவும், திண்டுக்கல் மாவட்டத்தில் 150 கிலோ கஞ்சாவும், திருச்சியில் 121  கிலோ கஞ்சாவும், வேலூரில்  102 கிலோ கஞ்சாவும், கோவையில் 35 கிலோ  கஞ்சாவும், சென்னையில் 42 கிலோ கஞ்சாவும், திருவள்ளூர் மாவட்டத்தில் 22  கிலோ கஞ்சாவும், சிவகங்கையில் 22 கிலோ கஞ்சாவும் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2018

    23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்