SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளியூர்வாசிகள் 3வது நாளாக சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு பஸ், ரயில்களில் மக்கள் வெள்ளம்

2018-01-14@ 00:36:50

* பொங்கல் களைகட்டியது * கரும்பு, மஞ்சள், காய்கறி விற்பனை படுஜோர்

சென்னை: தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ளதால், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இதனால், நேற்று 3வது நாளாக பஸ், ரயில்களில் மக்கள்  கூட்டம் அலைமோதியது.
 சென்னையில் வெளிமாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால், சென்னையில் இருந்து வெளி மாவட்டம் செல்லும் அனைத்தும் ரயில்களும் ஹவுஸ் புல் ஆனது. பஸ், ரயில்கள் முன்பதிவு செய்யாமல் செல்பவர்களின் கூட்டம் நேற்று 3வது நாளாக அலைமோதியது. ரயில்கள் ஹவுஸ் புல்: ஒவ்வொரு ரயில்களிலும் 300க்கும் அதிகமானோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர். ரயில்களில் இடம் கிடைக்காத பயணிகள், படிக்கெட்டில் அமர்ந்தபடி ஆபத்தான நிலையில் பயணித்தனர்.

பொங்கல் பொருட்கள் விற்பனை ஜோர்: தமிழகம் முழுவதும் பொங்கல் பொருட்கள் விற்பனையும் நேற்று களை கட்டியது. சென்னையில் அனைத்து பஜார்களிலும் வியாபாராம் சூடுபிடித்திருந்தது. 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு  ₹300 முதல் ₹500 வரையும், சில்லறை விலையில் ஒரு கரும்பு ₹50 வரையும் விற்கப்பட்டது. மஞ்சள் கொத்து ₹20, இஞ்சி கொத்து ₹20, வாழை குருத்து ₹20 என விற்கப்பட்டது. சில கடைகளில் இந்த விலை ₹5 முதல் ₹10 வரை வரை கூடுதலாக விற்கப்பட்டது. காய்கறி விலை வீழ்ச்சி: காய்கறிகளை பொறுத்தவரை, பல்லாரி வெங்காயம் ₹40 (பழைய விலை ₹70), சின்ன வெங்காயம் ₹60 (100), பீன்ஸ் ₹25 (50), கேரட் ₹40 (60), பீட்ரூட் ₹20 (30), முட்டை கோஸ்  ₹15 (25), காளிபிளவர் ₹20 (40), உருளை 18 (18), தக்காளி ₹10 (30), அவரைக்காய் ₹30 (50), வெண்டை காய் ₹25 (30), முள்ளங்கி ₹15 (25), கோவக்காய் ₹20 (30), கொத்தவரங்காய் ₹20  (30), பச்சை மிளகாய் ₹25 (40), கத்தரிக்காய் ₹15 (30), சவ்சவ் ₹15 (20), முருங்கைகாய் ₹80 (100), நூக்கல் ₹20 (25), சேனைகிழங்கு ₹30 (40) என்றும் விற்பனையாகிறது. ஒரு வாழைக்காய்  ₹12க்கும் விற்பனையாகிறது. விளைச்சல் அதிகரிப்பால் காய்கறி விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அரசு பஸ்களில் 4 லட்சம் பேர் பயணம்
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இந்த ஆண்டு பொங்கலையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,275 பஸ்களுடன் ஜன.11, 12, 13 ஆகிய தேதிகளில் கூடுதலாக 5,158 பஸ்கள்  அறிவிக்கப்பட்டன. நேற்று மட்டும் மொத்தம் 4,657 பஸ்கள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டததில் சுமார் 1.50 லட்சம் பேர் அரசு பஸ்களில் வெளியூர் சென்றுள்ளனர். மொத்தம், கடந்த 3 நாட்களில் அரசு  பஸ்களில் சுமார் 4 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • womenrallyUS

  அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பு: 3 லட்சம் பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி

 • delhi_fire_17dead

  டெல்லியில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து: 17 பேர் உடல் கருகி பலி

 • kabul_terror_43

  காபுலில் சொகுசு ஓட்டலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு : பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

 • Christiansmanila

  மணிலாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித நீர்தெளிப்பு திருவிழா : ஏராளமானோர் பங்கேற்பு

 • 22-01-2018

  22-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்