SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பா.ஜ.க. அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம்

2018-01-14@ 00:36:49

சென்னை: பா.ஜ.க. அரசிற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், மகிளா  காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி, மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், வீர பாண்டியன்,  சிரஞ்சீவி, சுமதி அன்பரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு உற்சாகமாக  பொங்கல் விழாவினை கொண்டாடினர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் எழை, எளிய மக்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது. விழாவின் போது, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக மக்கள் அனைவருக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நீதிபதிகள் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை  நீதிபதியும், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளும் கலந்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

பா.ஜ.க. அரசுக்கு எதிராக ப.சிதம்பரம் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதால்  திட்டமிட்டே அவரது வீட்டில் அமலாக்கத்துறையினரை வைத்து சோதனை நடத்தப்படுகிறது. இது  அரசியல் உள்நோக்கம் கொண்டது. மிகவும்  கண்டிக்கத்தக்கது.முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்துக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. பதவி கிடைக்கவில்லை என்ற அதிருப்தியிலும், சங்கடத்திலும் அவர் அப்படி பேசுகிறார். பாவம் அவரை   விட்டு விடுங்கள். அவருக்குகாக நான் அனுதாப படுகிறேன். எச்.ராஜா தர குறைவாக நாகரீக எல்லைகளை கடந்து  வைரமுத்துவை விமர்சனம் செய்திருப்பது மிகவும் கண்டனத்துகுறியது. மத்தியில் பா.ஜ.க ஆட்சி வந்ததில்  இருந்தே எச்.ராஜா உலகத்திற்கே ராஜா போல் செயல்பட்டுவருகிறார். இனிமேலாவது அவர் இப்படி மற்றவர்களை தரக்குறைவாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.ஐ.எஸ்.ஆர்.ஓ.விற்கு தலைவராக தமிழ்நாட்டில் உள்ள கன்னியாக்குமரி மாவட்டத்தை சேர்ந்த சிவன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. அவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து  கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaliland_boyshome

  தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

 • gujaratheavyrain

  குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

 • vintage_car_gurgaon

  பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

 • public_trans_venen

  வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

 • Manilarainstorm

  பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்