SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரதமரின் முதன்மை செயலாளரை சந்திக்க தலைமை நீதிபதி மிஸ்ரா மறுப்பு: நீதிபதிகள் பிரச்னையை தீர்க்க பார் கவுன்சில் முயற்சி

2018-01-14@ 00:01:10

புதுடெல்லி: மூத்த நீதிபதிகள் கூறிய குற்றச்சாட்டால் ஏற்பட்டுள்ள பிரச்னையை தீர்ப்பது பற்றி ஆலோசிப்பதற்காக தனது வீட்டுக்கு வந்த பிரதமர் மோடியின் முதன்மை செயலாளரை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சந்திக்க  மறுத்தார்.  இதனால், அவர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். அதே நேரம், நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையை தீர்க்க இந்திய பார் கவுன்சில் முயற்சி மேற்கொண்டுள்ளது.   உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகய், மதன் பி. லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லியில் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, ‘உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் தன்னிச்சையாக செயல்படுகிறார். உச்ச நீதிமன்ற நிர்வாகம் சமீப காலமாக சரியாக செயல்படவில்லை. இந்த நிலை நீடித்தால், நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது;  அழிந்துவிடும்’ என பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த கருத்து வேறுபாட்டை உடனடியாக தீர்க்கும்படி எதிர்க்கட்சி தலைவர்களும், நீதித்துறையை சேர்ந்தவர்களும் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர். இருப்பினும், இது நீதித்துறையின் உள்விவகாரம் என்பதால் அரசு இதில் தலையிட விரும்பவில்லை என்று நேற்று முன்தினம் கூறப்பட்டது. அதேநேரம், தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காமல் தலைமை  நீதிபதி தீபக் மிஸ்ரா மவுனம் காத்து வருகிறார்.இந்நிலையில், பிரதமர் மோடியின் முதன்மை செயலாளரான நிரிபேந்திர மிஸ்ரா, நேற்று காலை டெல்லியில் உள்ள தீபக் மிஸ்ராவின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு அவரை சந்திக்கச் சென்றார். ஆனால், அவருக்கு உள்ளே செல்ல  அனுமதி கிடைக்கவில்லை. வாயில் கதவு கூட அவருக்காக திறக்கப்படவில்லை. இதனால், நிரிபேந்திரா ஏமாற்றத்துடன் காரில் திரும்பிச் சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையே ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வர, இந்திய பார் கவுன்சில் முயற்சி மேற்கொண்டுள்ளது. இது குறித்து இந்த கவுன்சிலின் தலைவர் மனோன் குமார் மிஸ்ரா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘உச்ச நீதிமன்றத்தில் நிலவும் பிரச்னைகளை மூத்த நீதிபதிகள் ஊடகங்களை சந்தித்து கூறி இருக்கக்கூடாது. உச்ச  நீதிமன்றத்தின் பிரச்னையை தீர்ப்பதற்காக எங்கள் அமைப்பின் சார்பில் 7 பேர் கொண்ட சிறப்பு குழு விரைவில் நியமிக்கப்படும். நீதிபதிகள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து முழு அரசியல் சாசன  அமர்வு விசாரித்து  முடிவு எடுக்க வேண்டும் என பார் கவுன்சில் சார்பில் தீரமானம் நிறை வேற்றப்பட்டுள்ளது’’ என்றார்.

தூது அனுப்பியது ஏன்? மோடிக்கு காங். கேள்வி
தலைமை நீதிபதியை சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்கு பிரதமரின் முதன்மை செயலாளர் நிரிபேந்திர மிஸ்ரா சென்றது பற்றி காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இக்கட்சியின் தலைமை தகவல் தொடர்பாளர் ரன்தீப் சிங்  சுர்ஜிவாலா நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமரின் முதன்மை செயலாளர், தலைமை நீதிபதியை சந்திக்க அவருடைய இல்லத்துக்கு சென்றுள்ளார். அவரை தனது சிறப்பு தூதராக தீபக் மிஸ்ராவின்  வீட்டுக்கு அனுப்பியதற்கான காரணத்தை பிரதமர் மோடி விளக்க வேண்டும்’ என்று கோரியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

  • CapeTownWaterCrisis

    வரலாறு காணாத வறட்சியால் கேப் டவுனில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் பரிதவிப்பு

  • NCCcampnirmala

    டெல்லியில் என்சிசி மாணவ-மாணவிகள் முகாம் : நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்

  • 23-01-2018

    23-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்