SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொள்ளையன் நாதுராம் கைது: குஜராத்தில் தலைமறைவாக இருந்தவனை போலீசார் மடக்கி பிடித்தனர்!

2018-01-13@ 21:35:02

அகமதாபாத்: சென்னை கொளத்தூர் நகை கடை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான நாதுராம் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தில் பதுங்கி இருந்த கொள்ளையன் நாதுராமை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.  சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் 3.5 கிலோ தங்க நகைகளை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாதுராம், கூட்டாளி தினேஷ் சவுத்ரி கொள்ளையடித்து சென்றனர். அவர்களை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை நவம்பர் மாதம் 18ம் தேதி ராஜஸ்தான் சென்றது. தேடுதல் வேட்டையில் நாதுராம், தினேஷ் சவுத்ரியின் உறவினர்கள் 4 பேரை கைது செய்து சென்னை கொண்டு வந்து விசாரணையை தொடங்கினர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆய்வாளர் பெரியபாண்டியன் தலைமையில், அதே தனிப்படை ராஜஸ்தான் சென்றது. அதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி இரவில் நாதுராமை செங்கல் சூளை ஒன்றில் வைத்து பிடிக்க முயன்ற போது,  இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. மோதலில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து ஆய்வாளர்  பெரியபாண்டியன் உயிரிழந்தார். முக்கிய குற்றவாளி நாதுராம் தன்னுடைய உறவினர்களுடன் தலைமறைவானார். அதைத்தொடர்ந்து 2வது முக்கிய குற்றவாளியான தினேஷ் சவுத்ரியை ஜோத்பூர் போலீசார் கைது செய்தனர். நாதுராமை பிடிக்க, ராஜஸ்தான் போலீசார் 3 தனிப்படைகளை அமைத்தனர்.  இதற்கிடையே நகை கடை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான நாதுராம் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தில் தலைமறைவாக இருந்த கொள்ளையன் நாதுராமை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். 

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2018

    23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்