SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீகார் முதல்வர் கார் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு: நிதிஷ்குமார் தப்பினார், பாதுகாவலர்கள் காயம்

2018-01-13@ 21:32:15

பாட்னா: பீகாரில் நலத்திட்டங்களை துவக்கி வைக்க சென்ற முதல்வர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு வாகனம் மீது, சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் நிதிஷ்குமாரின் பாதுகாவலர்கள் காயம் அடைந்தனர். பீகாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ. கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின் பல பகுதிகளிலும், அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை நேரடியாக பார்வையிடவும், மேலும் பல திட்டங்களை துவக்கி வைக்கவும், முதல்வர் நிதிஷ் குமார் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். விகாஷ் சமீக் ஷா யாத்ரா’ என்ற பெயரில், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இவர் நேற்று புக்சாரில் நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக காரில் சென்றார். அவரது காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் கார்கள் சென்றன.

அப்போது அவரின் பாதுகாப்பு வாகனம் மீது, மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில், முதல்வரின் பாதுகாவலர்களுக்கு காயம் ஏற்பட்டது. எனினும், முதல்வர் நிதிஷ் குமார் எவ்வித பாதிப்பும் இன்றி தப்பினார். நலத்திட்டங்களை துவக்கி வைத்த பின் முதல்வர் நிதிஷ் குமார் பேசியதாவது: என் மீது பொதுமக்களுக்கு எந்த கோபமும் இல்லை. மாநில அரசு நிறைவேற்றும் நலத்திட்டங்களால், மக்கள் பலனடைந்து உள்ளனர். அரசின் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் இந்த அரசின் செயல்பாடுகளை முடக்க நினைக்கும் சக்திகள், எனக்கு எதிராக, சிலரை தூண்டி வேடிக்கை பார்க்கின்றன. எதற்கும் கவலைப்படாமல், தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tokyo_olympic_2020

    டோக்கியோ 2020 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னங்கள் வெளியீடு!!

  • kandhan_savadi11

    கந்தன்சாவடியில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விபத்து : 2 பேர் பலி ; பலர் படுகாயம்

  • LosAngelesSuperMarketshot

    லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சூப்பர் மார்க்கெட் கடைக்குள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

  • boataccident_19dead

    பிரான்சன் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி

  • intel_beer_fes

    சர்வதேச பீர் திருவிழா : கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் உடன் 1300 வகையான பீர்கள் விழாவில் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்