SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 29ல் துவக்கம்

2018-01-13@ 20:56:38

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 29ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 29ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டில் முதல் கூட்டம் என்பதால் முதல் நாளான 29ந் தேதி மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துவார். இந்த கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெறும். வருகிற 29ந் தேதி தொடங்கும் கூட்டத்தொடர் பிப்ரவரி 9ந் தேதி ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் மார்ச் மாதம் 5ந் தேதி முதல் மீண்டும் நடைபெறும். பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 15ம் தேதி தொடங்கி ஜனவரி 5ம் தேதி வரை நடைபெற்றது. மன்மோகன்சிங் குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி அவையை தொடர்ந்து முடக்கி வந்தது. இதனால் குளிர்கால கூட்டத்தொடரின் பெரும்பாலான நாட்களில் எந்த அலுவலும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் இந்த கூட்டத்தொடரின் போது முத்தலாக் தடை மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. மக்களவையில் ஆளும் கட்சிக்கு பலம் இருப்பதால் அங்கு எளிதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அங்கு இந்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் இந்த மசோதா மீண்டும் தாக்கல் ெசய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tokyo_olympic_2020

    டோக்கியோ 2020 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னங்கள் வெளியீடு!!

  • kandhan_savadi11

    கந்தன்சாவடியில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விபத்து : 2 பேர் பலி ; பலர் படுகாயம்

  • LosAngelesSuperMarketshot

    லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சூப்பர் மார்க்கெட் கடைக்குள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

  • boataccident_19dead

    பிரான்சன் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி

  • intel_beer_fes

    சர்வதேச பீர் திருவிழா : கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் உடன் 1300 வகையான பீர்கள் விழாவில் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்