SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 269/6

2018-01-13@ 20:52:19

செஞ்சுரியன்: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் 2வது டெஸ்ட் போட்டி, செஞ்சுரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷிகர் தவான், சஹா  மற்றும் புவனேஷ்குமாருக்கு பதிலாக பர்தீவ் படேல், கேஎல் ராகுல் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடினர்.

அபாரமாக ஆடிய மெர்கரம் 94 ரன்கள் விளாச அடுத்து களமிறங்கிய ஆம்லா 82 ரன்கள் விளாசினார். இருப்பினும் இந்திய பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் எடுத்தனர். இதற்கிடையே முதல் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டூ பிளசிஸ் 24 ரன்களுடனும் மற்றும் மகராஜ் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2018

    23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்