SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உச்சநீதிமன்ற குழப்பங்கள் சில நாட்களில் சரியாகிவிடும்: மத்திய அரசின் தலைமை வக்கீல் நம்பிக்கை

2018-01-13@ 20:04:25

புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான 4 மூத்த நீதிபதிகளின் கருத்துவேறுபாடு சில நாட்களில் சரியாகி விடும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் கூறினார். நேற்று உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள், ஜே.சலமேஸ்வர், ரஞ்சன் கோகய், எம்.பி. லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் நீதித்துறையில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக, தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தை வெளியிட்டனர். பின்னர் நீதிபதி சலமேஸ்வர் இல்லத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்: இது, மிகவும் அசாதாரண சூழ்நிலை. உச்ச நீதிமன்றத்தின் சில நிர்வாக செயல்பாடுகள் முறையாக இல்லை. குறிப்பாக, கடந்த சில மாதங்களில், சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளன. நீதித் துறையை காப்பாற்றாவிட்டால், நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது என்றார்.

நாட்டையே அதிர வைத்த இந்த நிகழ்வு குறித்தும், நீதித் துறைக்குள் எழுந்துள்ள பிரச்னை; அதில் தலையிடுவதில்லை என்று மத்திய அரசு ஒதுங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபாலுடன், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் கே.கே. வேணுகோபால் கூறுகையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர்கள் முன்பாக குற்றம்சாட்டியது வருத்தத்திற்குரியது. கருத்துவறுபாடுகளை வெளிப்படையாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்க கூடாது. மாற்று வழியை பயன்படுத்தியிருக்கலாம். இருப்பினும் கருத்துவேறுபாடுகள் சில நாட்களில் தீர்க்கப்படும் பொறுத்திருங்கள் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • womenrallyUS

    அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பு: 3 லட்சம் பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி

  • delhi_fire_17dead

    டெல்லியில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து: 17 பேர் உடல் கருகி பலி

  • kabul_terror_43

    காபுலில் சொகுசு ஓட்டலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு : பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

  • Christiansmanila

    மணிலாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித நீர்தெளிப்பு திருவிழா : ஏராளமானோர் பங்கேற்பு

  • 22-01-2018

    22-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்