SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது: சித்தராமையா திட்டவட்டம்!

2018-01-13@ 19:39:15

பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. டெல்டா விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை எனவே காவிரியில் இருந்து  7 டி.எம்.சி தண்ணீரை உடனே திறந்துவிடுமாறு சித்தராமையாவுக்கு முதல்வர் எடப்பாடி இன்று கடிதம் எழுதினார். மேலும் மேட்டூர் அணையில் தற்போது உள்ள 21 டி.எம்.சி தண்ணீர் போதுமானதாக இல்லை என்றும் கர்நாடகத்தில் 4 அணைகளில் 49 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது என்றும் குறைந்தது 15 டி.எம்.சி தண்ணீரை காவிரியில் கர்நாடகம் வழங்க முடியும் என்றும் முதல்வர் எடப்பாடி கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார். தமிழ்நாட்டில் காவிரி விவசாயிகளின் தேவை கருதி கர்நாடகம் தண்ணீர் தரவேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த கோரிக்கையை கரத்னாட்க நிராகரித்துள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் எங்களுக்கே இல்லாதபோது தமிழகத்துக்கு எவ்வாறு நீர் தர முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: கர்நாடகா மாநில மக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருக்கிறது. கர்நாடகாவில் மழையின்றி வறட்சி நிலவுவதால் அணைகளில் போதிய அளவில் தண்ணீர் இருப்பு இல்லை. மேலும் காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பே வரும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-01-2018

    21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

  • turkey_dust_storm

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • republic_vilaaa

    குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்