SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாலையோரக் கடைகள் வைப்பதற்கும் ஆதார் அவசியம்: ஐகோர்ட் அதிரடி!

2018-01-13@ 17:46:01

சென்னை: சாலையோரக் கடைகள் வைப்பதற்கான அனுமதி பெறுவதற்கு ஆதார் அவசியம் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல் தனியார் துறையிலும் இதே முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் வேறு வழியில்லாமல் இதை சகித்து கொண்டு ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தலைநகர் சென்னையில் சாலையோரக் கடைகள் வைக்க அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது விரைந்து முடிவெடுக்க உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், சாலையோரக் கடைகள் வைப்பதற்கு ஆதார் கட்டாயம் என்று உத்தரவிட்டது.

மேலும் ஒருமுறை அனுமதி பெற்றவர்கள் மீண்டும் முறைகேடாக அனுமதிபெறுவதைத் தடுப்பதற்காக ஆதார் அட்டை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி, கல்லூரிகளின் அருகில் பெட்டிக்கடைகள் வைக்க அனுமதி அளிக்கக் கூடாது என்றும், பெட்டிக்கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதிக்கக் கூடாது என்றும் சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்