SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கமுதி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் அதிகாரியை லாரி ஏற்றி கொல்ல முயற்சி

2018-01-13@ 13:06:46

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை லாரி ஏற்றி கொல்ல முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வள்ளக்குளத்தில் இருந்து திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த லாரியை அபிராமபுரம் வருவாய் ஆய்வாளர் பிரசாத் பிடிக்க முயன்றுள்ளார். அப்போது பிரசாத்தை லாரி ஏற்றிக்கொல்ல முயன்றதை அடுத்து அவர் சாலையை விட்டு குதித்து தப்பியோடியுள்ளார்.

உயிர் தப்பிய பிரசாத் இருசக்கர வாகனத்தில் மணல் லாரியை துரத்திச் சென்று பிடிக்க முயன்றபோது லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி ஓட்டுனர் மற்றும் லாரிக்கு பாதுகாப்பாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும் தப்பியோடிவிட்டனர். தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்