SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாடு கழுத்தில் கட்டும் கயிற்றையும் விட்டுவைக்காத ஜிஎஸ்டி: 30% விலை உயர்வு!

2018-01-13@ 12:52:16

சேலம்: மாடுகளுக்கு கட்டி அழகு பார்க்கப்படும் சலங்கை மணிகள், சங்கு கயிறுகளையும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு விட்டுவைக்கவில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும், உழைத்து கொட்டும் மாடுகளை பொங்கல் பண்டிகையின் ஒரு நாளில் அழகு பார்த்து மகிழ்வது விவசாயிகள் வழக்கமாகும். மணிகள், சங்குகள், பல வண்ண கயிறுகளை கழுத்தில் கட்டி கொம்புகளில் வர்ணம் பூசி மாடுகளை அலங்கரிப்பர். பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூரில் வாரச்சந்தைகளில் மாடுகளுக்கு அணிவிக்கப்படும் கயிறுகள் அதிகளவில் குவிந்துள்ளன.

ஆனால் விலை மட்டும் ஏரியுள்ளது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரியால் கயிறுகளின் உற்பத்தி செலவு அதிகரித்து கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது கடந்தாண்டு ரூ.100க்கு விற்கப்பட்ட கயிறு இவ்வருடம் ரூ.150க்கு விறகப்படுகிறது. ஏற்கனவே வறட்சி மற்றும் தீவண பற்றாக்குறையால் மாடுகள் வளர்ப்பு குறைந்துவிட்டது. இந்த நிலையில் இதுபோன்ற விலையேற்றத்தால் மாடு வைத்திருப்போர் கூட பண்டிகையை தவிர்த்துவிடுவதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்