SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாட்ஸ் அப், பேஸ்புக் மோகத்தால் மறைந்து போன வாழ்த்து அட்டை கலாச்சாரம்

2018-01-13@ 12:27:10

வாட்ஸ் அப், பேஸ்புக் வரவால் வாழ்த்து அட்டை கலாச்சாரம் மறைந்து வருகிறது. தமிழகத்தில், கடந்த 2000ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, தமிழ் புத்தாண்டு, தீபாவளி, பிறந்த நாள், திருமணம் நாள், காதலர் தினம், நண்பர்கள் தினம் உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு வாழ்த்து அட்டைகள், போஸ்ட் கார்டுகள் மூலம், ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிப்பது வாடிக்கையாக இருந்தது. இதற்காக வண்ணமயமான வாழ்த்து அட்டைகள்  சிவகாசி, சென்னையில் தயாரிக்கப்பட்டது. பண்டிகை நாட்களில் ஒரு வாரத்திற்கு முன்பே, இந்த வாழ்த்து அட்டைகள் பேன்சி ஸ்டோர், புக் ஸ்டால், மளிகைக் கடைகளில் விற்பனைக்காக தொங்கவிடப்படும். இதை இளைஞர்கள், இளம்பெண்கள் வாங்கி, அதில் ‘யுவர்ஸ் லவிங்க்லி’ என எழுதி கையொப்பமிட்ட வாழ்த்து எழுதி தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிடையாக ஒருவருக்கொருவர் வழங்குவர். வாழ்த்து அட்டை பெறும் நபர்கள், அதை வாங்கி பிரித்து பார்த்து மகிழ்ச்சியில் திளைப்பார்கள்.  

இதுபோன்ற வாழ்த்து அட்டைகளை, ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் பலர் நினைவு பரிசாக பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். இப்படி பல லட்சம் மனங்களை ஈர்த்த வாழ்த்து அட்டை கலாச்சாரம் மறைந்து வருகிறது. 2000ம் ஆண்டுக்கு பிறகு, செல்போன் வரவால் வாழ்த்து அட்டை கலாச்சாரம் 50 சதவீதம் சரிந்தது. அப்போது செல்போனில் மெசேஜ் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். 2012ம் ஆண்டுக்கு பிறகு ஆண்ட்ராய்டு செல்போன்கள் புழக்கம் அதிகரித்தது. இதன் மூலம் வாட்ஸ் அப், பேஸ்புக் ஓபன் செய்து, அதன் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வாட்ஸ் அப், பேஸ்புக் வரவால் வாழ்த்து அட்டை கலாச்சாரம் சுத்தமாக மறைந்து போய் விட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி, கடைகளில் பொங்கல் வாழ்த்து அட்டை விற்கப்படுகிறதா என்று தேடி பார்த்தபோது, ஒரு கடையில் கூட வாழ்த்து அட்டை இல்லை என்பது வேதனைக்குரிய தகவலாக கிடைத்தது.

இது குறித்து, சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த வியாபாரிகள் கூறியதாவது:
2000ம் ஆண்டுக்கு முன்பு வரை, வாழ்த்து அட்டை கலாச்சாரம் கொடி கட்டி பறந்தது. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல், வாழ்த்து அட்டைகள் வியாபாரம் சுறுசுறுப்பாக இருந்தது. இதற்காக பல வண்ணங்களில் வாழ்த்து அட்டையை விற்பனைக்கு வைப்போம். வயது வித்தியாசம் இல்லாமல், வாழ்த்து அட்டைகளை வாங்கி உறவினர், நண்பர்களுக்கு அனுப்புவார்கள். விழா காலங்களில் வாழ்த்து அட்டை வியாபாரம் நல்ல முறையில் இருந்தது. எப்போது செல்போன் வளர்ச்சி தலை தூக்க ஆரம்பித்தோ, அன்று முதல் வாழ்த்து அட்டை அனுப்புவது 99 சதவீதம் குறைந்தது. இன்று ஒரு வாழ்த்து செய்தியை செல்போன் மூலம் மிக குறைந்த செலவில், பல்லாயிரம் பேருக்கு அனுப்புகின்றனர். கடந்த 10 ஆண்டாக வாழ்த்து அட்டை கேட்டு, ஒரு வாடிக்கையாளர் கூட கடைக்கு வரவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bus_fire_kazakhstan

    கஜகஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 52 பேர் கருகி உயிரிழப்பு

  • london_light_festival

    குளிர்கால விளக்குத் திருவிழா: விளக்கின் வெளிச்சத்தில் மின்னும் லண்டன் நகரம்!

  • kalaivanar_arangil11

    கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்திய ராணுவ தளவாட உற்பத்திக்கான புதிய பங்களிப்பு தொடர்பான கண்காட்சி

  • popecile

    போப் ஆண்டவர் தென் அமெரிக்கா நாடுகளில் சுற்றுப்பயணம்

  • prakash_IIT_chennai

    இந்தியாவில் முதல் முறையாக பல்கலைக்கழகத்தால் இயக்கப்படும் ஆராய்ச்சி பூங்கா: சென்னை ஐஐடியில் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்