SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுற்றுசூழல் அனுமதி பெறும் நடைமுறையால் திட்டங்கள் தாமதம் : மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

2018-01-13@ 12:15:08

டெல்லி : சுற்றுசூழல் அனுமதி பெறும் நடைமுறைகளால் மிகவும் பயனளிக்கும் பல திட்டங்கள் தாமதமாகி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.ராணுவ பொறியியல் சேவையின் கட்டுனர் கழகத்தின் விழாவில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது எல்லைப் பகுதியில் உள் கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களை செயல்படுவதற்கு நிதி பற்றாக்குறை ஏதுமில்லை என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில் பயனுள்ள திட்டங்களை செயல்படுத்துவது சுற்றுசூழல் அனுமதி பெறும் நடைமுறைகளால் தாமதமாகவும் அவர் குறிப்பிட்டார். திட்டங்களுக்கு அனுமதி பெறும் வகையில் அதற்கான நடைமுறைகளை மத்திய அரசு விரைவுப் படுத்தி வருவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

2017 முதல் 2022க்குள் ஆன காலக்கட்டத்தின்  சாலை உள் கட்டமைப்பு திட்டங்களுக்காக மத்திய அரசு 7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் இதில் எல்லைப்பகுதியில் 200 கிமீ தொலைவிற்கு சாலை அமைப்பதும் அடங்கும் என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.   

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்