SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புகை மற்றும் மூடுபனியால் சென்னை ஸ்தம்பித்தது : விமானம், ரயில் சேவை பாதிப்பு

2018-01-13@ 07:38:58

சென்னை: மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கேற்ப பழைய பொருட்களை எரித்து போகியை மக்கள் கொண்டாடினர். பழைய பொருட்களை எரித்ததால் பனியுடன் புகையும் சூழ்ந்துள்ளது. கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் போகி பண்டிகையையொட்டி  இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றனர். சுவாசிக்கக் கூட சிரமமாக உள்ள நிலையில் தற்போது காற்றின் தரம் உள்ளது.

விமான சேவை பாதிப்பு

பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3 மணி முதல் சென்னையில் விமானம் இறங்க அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் கிளம்பவில்லை. சென்னையில் இறங்க வேண்டிய விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன. சென்னைக்கு வரவேண்டிய 12 வெளிநாட்டு விமானங்கள், 6 உள்நாட்டு விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்பட்டது. கடும் பனிமூட்டம் காரணமாக மின்சார ரயில்கள் வேகம் குறைத்து இயக்கப்பட்டது.

வழக்கத்தை விட கூட்டம் அதிகம்

பொங்கலுக்கு ஊருக்குச் செல்ல இருந்தவர்கள் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். பேருந்து ஸ்டிரைக் காரணமாக ஏராளமானோர் விமானத்தில் முன்பதிவு செய்திருந்தனர். சென்னையில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

வாகன ஓட்டிகள் அவதி

கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை எரித்ததால் பனியுடன் புகையும் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டப்படி வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்