SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொங்கலை முன்னிட்டு மதுக்கடைகளில் வசூல் வேட்டைடாஸ்மாக் மேலாளர் உட்பட 3 பேர் கைது

2018-01-13@ 06:36:34

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மதிச்செல்வம், சூப்பர்வைசர்கள் முருகேசன், மணிவண்ணன் ஆகிய மூன்று அதிகாரிகளும்  மாவட்டத்தில் உள்ள பல்வேறு  டாஸ்மாக் கடைகளில் பொங்கல் வசூலில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, 3 அதிகாரிகளையும் கையும் களவுமாக பிடிக்க, லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் கண்காணித்து வந்தனர்.

அனைத்து வசூல்களையும் முடித்துக்கொண்ட அதிகாரிகள் 3 பேரும் சிப்காட் பகுதியில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்திற்கு காரில் திரும்பினர். அப்போது புதுக்கோட்டை ஜெயில் அருகே அவர்களது காரை வழிமறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். இதில் அவர்களிடமிருந்து ரூ.8 லட்சத்து 36 ஆயிரத்தை கைப்பற்றினர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்திற்கு அவர்கள் அழைத்து வந்தனர். அங்கு அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்