SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொங்கலுக்கு ஊருக்கு வந்தபோது பரிதாபம்: லாரி-கார் நேருக்கு நேர் மோதி 5 பேர் உடல் நசுங்கி பலி

2018-01-13@ 06:33:38

வந்தவாசி: வந்தவாசி அடுத்த கூத்தம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேலு(50), சென்னையில் எலக்ட்டீரிசியனாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், பொங்கல் பண்டிகை கொண்டாட தனது மனைவி செல்வி, மகள் பிரியங்கா, உறவினர்கள் சந்தோஷ்குமார், நித்தீஷ் ஆகியோருடன் காரில் கூத்தம்பட்டு கிராமத்துக்கு நேற்று வந்து கொண்டிருந்தனர்.  சந்தோஷ்குமார் காரை ஓட்டினார். மேலும் காரில் இடமில்லாததால், வேலுவின் மற்றொரு மகன் பிரசன்னா(22), மகள் காயத்திரி(19) ஆகியோர் காரை பின்தொடர்ந்து பைக்கில் வந்து கொண்டிருந்தனர். வந்தவாசி-காஞ்சிபுரம் நெடுஞ்சாலை வெண்குன்றம் மலையடிவாரம் அருகே ேநற்றிரவு வந்தபோது வெலாங்காடு கூட்டுசாலையில் காரின் குறுக்கே ஒரு பைக் நுழைந்தது.

இதனால், பைக் மீது மோதாமல் இருக்க, சந்தோஷ்குமார் காரை வலது பக்கமாக திருப்பியதாக தெரிகிறது. அப்போது, வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற லாரியின் மீது கார் நேருக்கு நேர் மோதியது.இந்த விபத்தில் கார் நொறுங்கி உருக்குலைந்தது. இதில் காரில் வந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த வந்தவாசி டிஎஸ்பி பொற்செழியன், இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

மேலும் தீயணைப்பு துறையினரை வரவழைத்து நொறுங்கி கிடந்த காரை கடப்பாறையால் நீக்கி சிக்கியிருந்த 5 பேரின் உடல்களை மீட்டனர்.  சடலங்களை கைப்பற்றி வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்