SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சினிமாவில் 25 ஆண்டுகள் நிறைவு: ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி சென்னையில் ரசிகர்கள் ஆரவாரம்

2018-01-13@ 06:30:40

சென்னை: இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் 1992ம் ஆண்டு வெளிவந்த ‘ரோஜா’ படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பிராந்திய மொழி படங்கள் மட்டுமின்றி  ஹாலிவுட்  படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். அவர் சினிமாவுக்குள் நுழைந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த இசை பயணத்தில், சர்வதேச அளவில் 2 ஆஸ்கர், 2 கிராமி விருதும், இந்திய அளவில் 4 தேசிய விருதுகளும், மாநில விருது நான்கும் பெற்றுள்ளார். இதுதவிர, பத்மபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

இந்நிலையில், தனது 25வது ஆண்டையொட்டி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று இரவு  ஏ.ஆர்.ரகுமான் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தினார், 3 மணி நேரம் நடந்த இந்த இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமானுடன் பாடகர்கள் ஹரிசரண், ஸ்ரீநிவாஸ், நிதி மோகன், ஷாஷா திரிபாதி, அஸ்வின் ஜோஸ், சித் ஸ்ரீராம், விஜய் பிரகாஷ், உள்ளிட்ட பல முன்னணி பாடகர்கள் கலந்து கொண்டு பாடினர். டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட இசை கலைஞர்களும் கலந்து கொண்டார்கள். இசை நிகழ்ச்சியின் மேடை எல்ஈடி ஸ்கிரீனால் உருவாக்கப்பட்டிருந்தது.

பாடல்களுக்கேற்ற பின்னணியை திரையிட்டது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் “தீ தீ... ஜெக ஜோதி ஜோதி...” என்ற பாடலுடன் மேடையில் ஏ.ஆர்.ரகுமான் தோன்றினார். தொடர்ந்து “முக்காலா முக்காப்புலா” பாடல் பாடினார். அதன்பிறகு ‘ரோஜா’ படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் முதல் ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ வரையிலான ரகுமானின் முக்கிய பாடல்கள் பாடப்பட்டது. 14 வயதுக்கு உட்பட்ட சுமார் 25 குழந்தைகள் ‘பல்லேலக்கா’ உள்ளிட்ட சில பாடல்களுக்கு கோரஸ் பாடியது பார்வையாளர்களை மிகவும் ஈர்த்தது.  

இசை கலைஞர்களின் தனி திறமையை வெளிப்படுத்தும் போட்டி நிகழ்ச்சி, ரசிகர்களின்  கைதட்டலை அள்ளியது.‘ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடலில் ‘500 ரூபா செல்லாமபோனா டேக் இட் ஈசி பாலிசி, ஆயிரம் ரூபாய் செல்லாமப்போனால் டேக் இட் ஈசி பாலிசி’ என்று ரகுமான் பாடிய போது ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர் அதேபோல ‘முஸ்தபா முஸ்தபா’ பாடலில் ‘காலம் நம் தோழன்’ என்பதற்கு பதிலாக ‘காலம் நம் தமிழன், காலம் நம் தமிழ்’ என்று மாற்றி பாடியபோது ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினார்கள். இறுதியாக ‘ஜெயஹோ’ பாடலுடன் இசை நிகழ்ச்சி முடிவுற்றது. நிகழ்ச்சியில் 15 நகரங்களில் நடந்த குரல் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 7 பேர் நிகழ்ச்சியில் பாடினார்கள்.

கடந்த ஆண்டு வெளிவந்த ஆல்பத்தில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த ‘மெர்சல்’ படத்தின் ஆல்பத்துக்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு விருது வழங்கப்பட்டது. இறுதியாக, “எல்லாப் புகழும் இறைவனுக்கே. சென்னை மக்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் சந்திப்போம்” என்றுகூறி விடைபெற்றார். ஏ.ஆர்.ரகுமான்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-01-2019

  15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • MakarSankrantiFestival

  வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

 • 14-01-2019

  14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-01-2019

  13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 12-01-2019

  12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்