SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

2018-01-13@ 06:28:00

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பேரவையை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கும் தீர்மானத்தை அவை முன்னவரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அப்போது,‘‘ சபாநாயகர், முதல்வர், எதிர்கட்சி தலைவர், துணை தலைவர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணமடைந்து மீண்டும் பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எனது அவாவை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

 தொடர்ந்து சபாநாயகர் பேசுகையில்,‘‘ கடந்த 5 நாட்களாக பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றவும், கூட்டத்தை நல்ல முறையில் நடத்தவும் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார். இதை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபாநாயகர் தனபால் பேரவையை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்