SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிக நேரம் தூங்குவது இனிப்பு ஆர்வத்தை குறைக்கிறதா?

2018-01-13@ 01:51:20

லண்டன்: அதிக நேரம் தூங்குவதன் மூலம் இனிப்பு உணவு பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்கலாம் என ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.  இந்த ஆய்வில் ஒவ்வொரு நாள் இரவும் நீண்ட நேரம் தூங்குவது என்பது இனிப்பு மீதான ஆர்வத்தை குறைப்பதற்கான சிறந்த வழியாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது.  இதனால், ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க முடியும் என்றும் தெரியவந்துள்ளது. ஆய்வின்படி மனிதர்கள் குறைந்தபட்சம்  7 மணி நேரமாவது கட்டாயமாக தூங்க வேண்டும். இந்த தூக்க நேரம் குறையும்பட்சத்தில் உடல் பருமன், இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த ஆய்வில் இங்கிலாந்தில் உள்ள பெரியவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெரியவர்கள் பரிந்துரைக்கப்பட்ட 7 மணி நேர தூக்கத்தை பெறவில்லை என்பதும், இதனால் அவர்கள் பல்வேறு சுகாதார பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட சோதனை, தூக்கமின்மை உள்ள பெரியோர்களிடம் தூக்க நேரத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை பகுப்பாய்வு செய்தது.  அதே நேரத்தில் தூக்க நேரம் அதிகரிக்கும்போது அவர்களின் உணவு பழக்கம் மாறுகிறதா என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கவனமுடன் உற்றுநோக்கி வந்தனர்.  21 பேர் இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர்.  இவர்களின் தூக்க நேரம் நாள்தோறும் 1.5 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.

அதேபோல் மற்றொரு 21 பங்கேற்பாளர்களும் ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் அவர்களது தூக்க நடைமுறையில் எந்த குறுக்கீடும் செய்யப்படவில்லை. தூக்க நேரம் நீட்டிக்கப்பெற்றவர்கள்  ஆய்வுக்கு முன்னர் எடுத்துக்கொண்ட இனிப்பின்  அளவோடு ஒப்பிடும்போது,, ஒவ்வொரு இரவும் 10 கிராம் அளவிலான இனிப்பை எடுப்பதை குறைத்துக் கொண்டனர்.   அதேபோல்  தூக்க நேரத்தை நீட்டிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது  இவர்கள் குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட்டையே உட்கொண்டனர். ஆய்வின் தலைவரான ஹயா அல் கதீப் கூறுகையில், “தனியொருவரின் தூக்க நேரத்தை நீட்டிக்க செய்வது அவர்களின் ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்வதற்கு வழிவகுக்கும்.

இது அவர்களை நோய்கள் தாக்காமல் பாதுகாக்கிறது. தூக்க நேரம் மற்றும் தரத்தை மேம்படுத்துதல் என்பது பொதுமக்கள் சுகாதார கவலையை அதிகரிக்கும் ஒரு பகுதியாகும். பல்வேறு நிலைகளுக்கு ஆபத்து காரணியாக இது இணைக்கப்படுகிறது. தூக்க நேரமானது ஒரு மணி நேரம் கூடுதல் அல்லது மேலும் அதிகரிப்பது என்பது ஆரோக்கியமான உணவு தேர்வுக்கு வழிவகுக்கும்  என்பதையே எங்கள் ஆய்வு முடிவுகள் பரிந்துரைக்கிறது” என்றார். அமெரிக்காவை சேர்ந்த கிளீனிக்கல் நியூட்ரிஷியன் என்ற பத்திரிகையில் இந்த ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china_cloning11

  செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

 • snow_river_falls11

  மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

 • christmas_planeealm1

  உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

 • sutrula_12Icehotel1

  சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

 • mumbai_theevibathu11

  மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்