SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு : மல்லையாவுக்கு ஏப். 2 வரை ஜாமீன்

2018-01-13@ 01:48:40

லண்டன்: ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்தாது தொடர்பாக பிரபல மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையா மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மல்லையா இங்கிலாந்தில் தஞ்சமடைந்தார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு கேட்டுக் கொண்டதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் ஸ்கார்ட்லாந்து யார்டு போலீசார் மல்லையாவை கைது செய்தார். ஆனால் சில மணி நேரத்திலேயே ரூ.5 கோடி பிணைத்தொகை கொடுத்து ஜாமீன் பெற்றார். அவரை நாடு கடத்தக் கோரும் வழக்கு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு தலைமை மாஜிஸ்திரேட் எம்மா ஆர்பத்நாட் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் மல்லையா ஆஜாரானார். அவர் தரப்பில் வாதாடிய வக்கீல், இந்தியா தரப்பில் அளிக்கப்பட்ட ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். இந்தியா-பிரிட்டன் இடையேயான உடன்படிக்கையின்படிகீழ் தேவையான ஆவணங்கள் இந்தியா தரவில்லை என குற்றம்சாட்டினார். அவர் தரப்பு வாதம் நிறைவடையாத நிலையில், இந்த வழக்கை நீதிபதி எம்மா ஆர்பத்நாட் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். மேலும், மல்லையாவின் ஜாமீனை ஏப்ரல் 2ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-01-2018

    24-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்