SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எரவாடா சிறையில் அதிகாரிகள் மீது கைதிகள் திடீர் தாக்குதல்

2018-01-13@ 01:37:56

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள எரவாடா சிறையில் காவலராக பணியாற்றி வருபவர் ரமேஷ் பிசோலே. இவர் வழக்கம்போல் கைதிகள் அறைகளுக்கு சென்று சோதனையிட்டார். அப்போது, துஷார் ஹம்பீர் என்ற கைதி அழுக்கான போர்வையை உதறினார். அதில் இருந்து தூசி வெளியானதால் போர்வையை மெதுவாக உதறுமாறு ரமேஷ் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த துஷார், சக கைதிகளுடன் சேர்ந்து ரமேசை தாக்கினார்.

இதுபற்றி அறிந்து வந்த ஜெயிலர் நாக்நாத் ஜெக்தாப் கைதிகளை கண்டித்தார். இதனால் கோபமடைந்த கைதிகள் அவரையும் சரமாரியாக தாக்கினர். பின்னர், சிறை காவலர்கள் வந்து தாக்குதல் நடத்திய கைதிகளை பிடித்தனர். தாக்குதல் நடத்திய 4 கைதிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்