SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொங்கல் பண்டிகை கொண்டாட அரசு பஸ்களில் 2 நாட்களில் 2.40 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

2018-01-13@ 01:23:41

சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் வெளியூர்வாசிகள், பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட செல்வது வழக்கம். தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக ஜன.11, 12, 13 ஆகிய தேதிகளில் முறையே 3,071, 4,255, 4,657 பஸ்கள் என மொத்தம் 11,983 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த பஸ்களில் முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வமுடன் இருந்தனர். இந்த நிலையில், கடந்த 8 நாட்களாக நடந்த பஸ் ஸ்டிரைக்கால் அரசு பஸ் முன்பதிவு முடங்கியது. பொங்கலுக்கு அரசு பஸ்கள் ஓடுமா, ஓடாதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்தது. டிக்கெட் முன்பதிவு செய்ய தயக்கம் காட்டினர். இந்நிலையில், பஸ் ஸ்டிரைக் நேற்று முன்தினம் இரவு வாபஸ் பெறப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இருப்பினும், நேற்று முன்தினம் இரவு வரை நீடித்த பஸ் ஸ்டிரைக்கால் அன்று பெரும்பாலானோர் பயணத்தை தள்ளி வைத்தனர்.

இந்த ஆண்டு ஒரு நாள் முன்னதாகவே, அதாவது நேற்று முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்று முன்தினம், 3071 சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்ட்ட நிலையில் ஸ்டிரைக் காரணமாக முழு அளவில் பஸ்கள் இயக்க முடியவில்லை. இருப்பினும், முன்பதிவு செய்த 7,060 பயணிகளுக்கு சுமார் 180 பஸ்கள் எந்த தடையும் இன்றி இயக்கப்பட்டது. முன்பதிவில்லாத பயணிகளுக்கு தேவைக்கேற்ப நேற்று முன்தினம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஸ்டிரைக் பீதியால் நேற்று முன்தினம் கூட்டமும் எதிர்பார்த்த அளவு செல்லவில்லை. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சுமார் 90,000 பேர் சொந்த ஊருக்கு அரசு பஸ்களில் சென்றனர். நேற்று காலை ஊழியர்கள் பணிக்கு திரும்பியதால் தமிழகம் முழுவதும் அரசு பஸ்கள் நேற்று வழக்கம்போல் இயங்கின.

சென்னையில் இருந்து 4,255 சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்படும் அறிவிக்கப்பட்டன. நேற்று முன்தினம் செல்ல முடியாதவர்கள் நேற்று சொந்த ஊர் சென்றனர். இதனால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று பகல் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. காலை 8 மணி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல், பூந்தமல்லி, தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையம், அண்ணா நகர் மேற்கு, இசிஆர் ஆகிய இடங்களிலும் நேற்று மக்கள் கூட்டம், கூட்டமாக சென்று பஸ் ஏறினர். நேற்று மட்டும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் வெளியூர் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பஸ் ஸ்டிரைக் நேற்று முன்தினம் வரை நீடித்தும் கூட, பயணிகள் சிரமப்படாமல் இருக்க தேவையான அளவு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அருகில் உள்ள சில ஊர்களுக்கு மட்டும் தனியார் பஸ்களை இயக்கினோம். தொலைதூர ஊர்களுக்கு முழுக்க, முழுக்க அரசு பஸ்கள்தான் இயக்கப்பட்டன. நேற்று ஊழியர்கள் பணிக்கு திரும்பியதால் சிறப்பு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் 40,000 பேர் அரசு பஸ்களில் முன்பதிவு செய்திருந்தனர். சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல நேற்று 27,000 பேர் முன்பதிவு செய்தனர். நாளை (இன்று) சொந்த ஊர் செல்ல இதுவரை தமிழகம் முழுவதும் இருந்து 26,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் 18,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். இன்று கடைசி நாள் என்பதால் கூட்டம் அதிகளவு இருக்கும். இன்று மட்டும் 2 லட்சம் பேர் அரசு பஸ்சில் சொந்த ஊர் செல்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • france_park_machine

  பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

 • madurai_meenut11

  மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

 • berlin_bomb_war

  இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

 • 10schooldata

  10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

 • governor_palace11

  பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்