SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பஸ், ரயிலில் அலைமோதும் மக்கள் கூட்டம்

2018-01-13@ 01:20:58

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்ததால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் விடிய விடிய பயணிகள் கூட்டம் அலைமோதியது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் கடைகளுக்கு சென்று புத்தாடை வாங்கி வருகின்றனர். கடந்த 8 நாட்களாக போக்குவரத்து ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் மக்கள்  வீட்டிற்குள் முடங்கி இருந்தனர். போராட்டம்வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, நேற்று முதல் வழக்கம்போல் பஸ்களை ஊழியர்கள் இயக்கினர்.

இதனால் சென்னையில் வசித்து வரும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல நேற்று அதிகாலை முதலே பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்கு படையெடுத்தனர். அனைவரும் ஒரே நாளில் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் உடமைகளுடன் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, பூந்தமல்லி, வேளச்சேரி, அடையாறு, கிண்டி, திருவான்மியூர் பகுதிகளில் பேருந்துக்காக விடிய விடிய காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது.

அதேபோல், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்யாத பயணிகள் நீண்ட வரிசையில் நின்று பயணச்சீட்டு வாங்கினர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தடுக்க ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தடையின்றி டிக்கெட் எடுக்கும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 29 சிறப்பு டிக்கெட் கவுண்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கவுண்டர்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து  வருகின்றனர். வழிப்பறி மற்றும் பிக்பாக்கெட் ஆசாமிகளை பிடிக்க போலீஸ் சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், எழும்பூர் ரயில் நிலையத்தில் கூடுதலாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமானம் மூலம் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பதால், விமான டிக்கெட்டும் 2 மடங்கு விலை உயர்ந்தது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • france_park_machine

  பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

 • madurai_meenut11

  மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

 • berlin_bomb_war

  இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

 • 10schooldata

  10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

 • governor_palace11

  பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்