SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீபக் மிஸ்ராவுக்கு 4 நீதிபதிகள் எழுதிய 7 பக்க கடிதத்தின் முக்கிய அம்சம்

2018-01-13@ 01:17:04

புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு 2 மாதங்களுக்கு முன் தாங்கள் எழுதிய கடிதத்தின் நகலை, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகய், எம்.பி.லோகூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் வெளியிட்டனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற நிர்வாகத்தில் சமீப காலமாக நடக்கும் சம்பவங்கள் குறித்தும், சில முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பற்றியும் தங்களின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காக மிகவும் வேதனையுடன் இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறோம். இந்த உத்தரவுகள் இந்த நீதிமன்றத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கும், உயர் நீதிமன்றங்களின் சுதந்திரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும், தலைமை நீதிபதி அலுவலகத்தின் நிர்வாக செயல்பாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

நாட்டுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த சில வழக்குகள், குறிப்பிட்ட சில அமர்வுகளுக்கு மட்டும் தங்கள் விருப்பப்படி விசாரணைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தவித அடிப்படையும் இல்லாமல் இது செய்யப்பட்டுள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தை பொறுத்தவரையில் எண் வரிசை அடிப்படையில்தான் தாங்கள் முதலிடத்தில் உள்ளீர்கள். இதைத் தவிர, நாம் அனைவரும் ஒரே தகுதி உடையவர்கள்தான். சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை உயர் நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரணை நடத்த பல்வேறு வரைமுறைகள் உள்ளன. அதன்படிதான், வழக்குகளை விசாரிக்க வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்றத்தை பொறுத்தமட்டில் நீங்கள் அதை பின்பற்றவில்லை.

அரசியல் சாசன அமர்வில் விசாரணை நீதிபதிகளை அமைப்பதற்கு முன்பாக அவர்களின் கருத்துகளை கண்டிப்பாக கேட்ட பிறகுதான்  இறுதி முடிவெடுக்க வேண்டும். இதில், இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த வழக்கு விசாரணை ஒன்றில் நீங்கள் அதை பின்பற்றவில்லை. அது என்ன வழக்கு என்பதை நாங்கள் குறிப்பிட்டு கூற விரும்பவில்லை. அதை வெளியிட்டால் நீதிமன்றத்துக்குதான் தலைகுனிவு ஏற்படும். எந்த வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என்பதில் நீங்களே தன்னிச்சையாக முடிவு எடுக்கிறீர்கள். இதை தவிர்ப்பது நல்லது. மேலும், வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என்பதை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் இப்போது முடிவு எடுத்து வருகிறது.

இதற்கு முன்பு இதை 5 நீதிபதிகள் கொண்ட குழு செய்து  வந்தது. கடந்த சில மாதங்களாக, அதாவது நீங்கள் பதவி ஏற்றதில் இருந்தே இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. நீங்கள் தன்னிச்சையாக எடுக்கும் ஒவ்வொரு முடிவும், எதிர்காலத்தில் தனிநபர் கருத்தாக அமைந்து விடும். வழக்கு ஒன்றில் ஒருவர் தன்னிச்சையாக முடிவு எடுத்தால் அதன் தீர்ப்பும் ஒருதலைபட்சமாக அமைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை. இதேபோல், தலைமை நீதிபதிக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளதாக நினைப்பது என்பது, உடனிருக்கும் மற்ற நீதிபதிகளின் ஒற்றுமைக்கு இது தீங்கு ஏற்படுத்தக் கூடியதாக அமையும். இவ்வாறு கடிதத்தில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SnakesDayatGuindy

  சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

 • PMspeachshellfellwb

  மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

 • BastilleDaycelebration

  பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

 • BodyPaintingFestival

  உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

 • 21stAnnualMudfestival

  தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்