SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோபா டெல் ரே கால் இறுதியில் பார்சிலோனா

2018-01-13@ 01:11:15

பார்சிலோனா: கோபா டெல் ரே கால்பந்து போட்டித் தொடரின் கால் இறுதியில் விளையாட பார்சிலோனா அணி தகுதி பெற்றது. கேம்ப் நோ ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 2ம் கட்ட போட்டியில் செல்டா டி விகோ அணியுடன் மோதிய பார்சிலோனா அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அந்த அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி 13வது மற்றும் 15வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். ஜோர்டி அல்பா (28வது நிமிடம்), லூயிஸ் சுவாரெஸ் (31’), ராக்கிடிச் (87’) தலா ஒரு கோல் போட்டனர்.

இந்த அணிகளிடையே நடந்த முதல் கட்ட ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆகியிருந்தது. மொத்த கோல் அடிப்பட்டையில் 6-1 என அபாரமாக வென்ற பார்சிலோனா கால் இறுதிக்கு முன்னேறியது. ரியால் மாட்ரிட், அத்லெடிகோ மாட்ரிட், வேலன்சியா, லெகானஸ், அலாவெஸ், எஸ்பேனியால், செவில்லா ஆகிய அணிகளும் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-01-2018

    24-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்