SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரம்பிகுளம் ஆழியார் நதிநீர் ஒப்பந்தப்படி தமிழகம் தண்ணீரை வழங்கவில்லை : எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் கடிதம்

2018-01-13@ 01:10:47

திருவனந்தபுரம்: பரம்பிகுளம்  ஆழியாரில் நதிநீர் ஒப்பந்தப்படி கேரளாவுக்கு தண்ணீர் வழங்கப்படாததை  கண்டித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் தமிழக முதல்வருக்கு கடிதம்  அனுப்பியுள்ளார். தமிழகம் - கேரளா இடையே பரம்பிகுளம் ஆழியாறு  நதிநீர் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இரு மாநிலங்களும் நீரை  பங்கிட்டு வருகின்றன. இந்த ஒப்பந்தம் பல ஆண்டுகளாக  புதுப்பிக்கப்படவில்லை. இதுதொடர்பாக இரு மாநில அதிகாரிகள் மட்டத்தில் பல  முறை பேச்சுவார்த்ைத நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை.

இந்நிலையில்  கேரள முதல்வர் பினராய் விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு  கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தமிழகம் - கேரளா இடையிலான  பரம்பிகுளம் ஆழியாறு நதிநீர் ஓப்பந்தத்தை தமிழக அரசு தொடர்ந்து மீறி  வருகிறது. இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகள் மட்டத்தில் நடந்த  பேச்சுவார்த்தையின்போது தமிழக அரசின் கவனத்துக்கு கேரளா கொண்டு சென்றது.  ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கேரளாவுக்கு  உரிய தண்ணீரை கொடுக்காதது மட்டுமல்லாமல் தாராபுரம் தாலுகாவில் உள்ள உப்பாறு  அணைக்கு பரம்பிகுளம் ஆழியாறில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக தமிழகம்  தண்ணீரை கடத்தி செல்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே  இதுதாெடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு  கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்