SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பழங்கள் விலை உயர்வு: காய்கறி விலை வீழ்ச்சி

2018-01-13@ 01:07:53

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஆண்டைபோல் இந்தாண்டும் 200 லாரிகளில் கரும்புகள் வந்துள்ளன. 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தமிழகத்தின் ஈரோடு, தேனி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வழக்கம்போல் 10 லாரிகளில் கரும்பு வரும்.தற்போது 15 லாரிகளில் வந்துள்ளது. இவற்றில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் வாழைப்பழம் ஒரு தார் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதுதவிர ஈரோடு, சேலம், ஆந்திர மாநிலம் காளகஸ்தி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மஞ்சள் கொத்து, 5 கொத்து கொண்ட ஒரு கட்டு 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

மஞ்சள் வாழை பழம் ஒரு தார் இதற்கு முன்பு 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பச்சை பழம் கிலோ 40 ரூபாய்க்கும், ஏலக்கி பழம் ரூ.80க்கும், செவ்வாழை கிலோ ரூ.100க்கும், மலைவாழை கிேலா 120க்கும் கிடைக்கிறது.
பூவன் பழம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், ஒரு வாழைக்காய் 12 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

காய்கறி மொத்த விலை
கடைகளில் ஒரு கிலோ,
(பழையது அடைப்பு குறிப்பில்)
பல்லாரி வெங்காயம்    40 (70)
சின்ன வெங்காயம்    60 (100)
பீன்ஸ்    25 (50)
கேரட்    40 (60)
பீட்ரூட்    20 (30)
கோஸ்    15 (25)
காளிபிளவர்    20 (40)
உருளை    18 (18)
தக்காளி    10 (30)
அவரைக்காய்    30 (50)
வெண்டை காய்    25 (30)
பாகற்காய்    20 (30)
முள்ளங்கி    15 (25)
கோவக்காய்    20 (30)
கொத்தவரங்காய்    20 (30)
பச்சை மிளகாய்    25 (40)
கத்தரிக்காய்    15 (30)
சவ்சவ்    15 (20)
முருங்கைகாய்    80 (100)
நூக்கல்    20 (25)
சேனைகிழங்கு    30 (40)

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

  • madurai_meenut11

    மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

  • berlin_bomb_war

    இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

  • 10schooldata

    10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

  • governor_palace11

    பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்