SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாலிபர்களிடம் திருமண ஆசைகாட்டி ரூ.3 கோடி சுருட்டல் : நடிகை உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு

2018-01-13@ 01:07:40

கோவை: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, 8க்கும் மேற்பட்டோரிடம் ரூ.3 கோடிவரை சுருட்டிய கோவையை சேர்ந்த நடிகை, அவரது தாய் உள்பட 5 பேர், நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சேலம் எடப்பாடி அருகேயுள்ள காட்டுவலவு பகுதியை சேர்ந்தவர்  பாலமுருகன் (32). ஜெர்மனி நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது திருமணத்துக்காக வெப்சைட்டில் மணப்பெண் தேடி வந்தார். கடந்த 2016-ல் கோவை பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்த மைதிலி என்கிற ஸ்ருதி (21) என்பவரின் ஜாதகம், போட்டோவை பார்த்து அவரது குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டார். ஸ்ருதியும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதை பயன்படுத்தி பாலமுருகனிடம் ரூ.41 லட்சம் வாங்கி மோசடி செய்துவிட்டார்.

இதுபற்றி, கோவை சைபர் கிரைம் போலீசில் பாலமுருகன் கடந்த ஆண்டு ஜூலையில் புகார் அளித்திருந்தார். இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி ஸ்ருதி குடும்பத்தினரை தேடி வந்தனர். நேற்றுமுன்தினம் கோவையில் ஸ்ருதி, அவரது தாய் சித்ரா, தம்பி சுபாஷ் (19), உறவினர் பிரசன்ன வெங்கடேஷ் (38),  நண்பர் சபரிநாத் (23) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 5 செல்போன்கள், ஒரு கார், 9 தங்க காசுகள், 2 வைர நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்களை நேற்று, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த சந்தோஷ்குமார் (30) என்பவரிடம் ரூ.45 லட்சம், சசிகுமாரிடம் ரூ.22 லட்சம், திண்டுக்கல்லை சேர்ந்த ராஜ்கமலிடம் ரூ.21 லட்சம், சென்னை புதுவண்ணாரபேட்டையை சேர்ந்த விஜய் உள்பட 8 பேரிடம் ஸ்ருதி திருமண ஆசை காட்டி ரூ.3 கோடி வரை சுருட்டியது தெரியவந்தது.

இதுபற்றி போலீசாரிடம் ஸ்ருதி அளித்த வாக்குமூலத்தில் கூறும்போது, நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். எனக்கு சினிமாவில் பெரிய ஹீரோயின் ஆகவேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு சென்றேன். மேக்கப், பகட்டான ஆடை வாங்க என் பெற்றோரிடம் வசதியில்லை. என் தாய் திருமண தகவல் மையம் நடத்தி வந்தார்.  அதில் வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழக இன்ஜினியர்களை திருமணம் செய்வதாக விருப்பம் தெரிவித்தோம். இதற்காக சினிமாவுக்காக எடுத்த என் போட்டோவை வெப்சைட்டில் வெளியிட்டோம். இதை பார்த்து, என்னை திருமணம் செய்ய ஆசைப்பட்டவர்களிடம், வீடு கடனில் இருக்கிறது, தாய்க்கு ஆபரேஷன்’ எனக்கூறி பணம் வாங்கினோம்.

நாங்கள் கேட்டதும் பணத்தை கொடுத்ததால் இதேபாணியில் 3 ஆண்டுகளாக மோசடி செய்தோம். சென்னையில் எங்கள் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்ததும் தலைமறைவாகி விட்டோம்’ என்று தெரிவித்தார். கஸ்டடியில் விசாரிக்க முடிவு: ஸ்ருதி குடும்பம், மோசடி பணத்தில் வீடு, இடம், தங்க நகைகள் வாங்கியிருப்பதாக தெரிகிறது. சொத்து ஆவணங்களை இவர்கள் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். வங்கி லாக்கரில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் இருக்கும் என தெரிகிறது. இவற்றை மீட்பதற்காக, பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் இவர்களை கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரிக்கவுள்ளனர். ஸ்ருதி, ஆடி போனால் ஆவணி’ என்ற படத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது. ஆனால், அந்த படம் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • AmazonSuperMarket

  பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

 • ManholeCoverJapan

  பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

 • PhilippineValcanoErruption

  பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

 • WorldEconomicConference

  ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

 • SWITZERLANDHeavySnow

  சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்