SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரத்து அதிகரிப்பால் சின்னவெங்காயம் விலை வீழ்ச்சி

2018-01-13@ 00:58:31

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, சோகத்தூர், அதகப்பாடி, இண்டூர், பாப்பாரப்பட்டி, அக்ரஹாரம், பென்னாகரம், நல்லம்பள்ளி, பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் சின்னவெங்காயத்தை பதப்படுத்தி, உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் சென்னை, சேலம், கோவை மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகளும் நேரில் வந்து வாங்கி செல்கின்றனர். தர்மபுரி உழவர் சந்தை, தினசரி மார்க்கெட்டுக்கு, வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விலை சரிந்து ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டிலும் ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் பெரிய வெங்காயம் கிலோ ரூ.50ம், பூண்டு ஒரு கிலோ ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

  • gujaratheavyrain

    குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு

  • vintage_car_gurgaon

    பழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்!

  • public_trans_venen

    வெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்!

  • Manilarainstorm

    பிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்