SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுவாமி சிலைகள் மாயமான வழக்கு: அறநிலையத்துறை இணை ஆணையருக்கு நிபந்தனை ஜாமீன்

2018-01-13@ 00:55:17

மதுரை: சுவாமி சிலைகள் மாயமான வழக்கில் அறநிலையத்துறை இணை ஆணையருக்கு, ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரிலுள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் 273 சுவாமி சிலைகள் இருந்துள்ளன. சிலைகளின் விபரத்தை கம்ப்யூட்டரில் பதிவு செய்வதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அப்போது 6 சிலைகள் மாயமாகி இருப்பதும், பழமையான பஞ்சலோக மாணிக்கவாசகர் சிலைக்கு பதிலாக போலி உலோக சிலை இருந்ததும் தெரியவந்தது.

 இதுகுறித்து வழக்குப்பதிவு ெசய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ேபாலீசார், இந்து அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு இணை ஆணையர் கஜேந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஆர்.பொங்கியப்பன், கஜேந்திரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும்வரை சென்னையில் தங்கி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் தினசரி இருவேளை ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

ரூ.1 லட்சத்திற்கு இரு நபர் ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செயல் அலுவலர் காமராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்