SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

“பலமுறை ஐ.வி.எப் -ல் தோல்வி அடைந்த பெண்கள் மீண்டும் கருத்தரிப்பது” குறித்து Dr.ஜெயராணி பேட்டி

2018-01-13@ 00:54:53

இந்தியாவிலேயே குழந்தை யின்மை சிகிச்சையில் முன்னணியில் உள்ளது சென்னை வடபழனியில் உள்ள ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் மற்றும் மருத்துவமனை. இந்தியாவிலேயே வெள்ளி விழா கொண்டாடும் முதல் குழந்தையின்மை சிகிச்சை மையம் ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகப்புகழ் பெற்ற இம்மருத்துவமனையின் இயக்குனர்கள் டி.காமராஜ், ஜெயராணி காமராஜ் ஆகியோர்  குழந்தையின்மை சிகிச்சையில் உலக அளவில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.  “இங்கு வந்தாலே குழந்தைபேறு உறுதி என்பதால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் சிகிச்சை பெற்று குழந்தையுடன் செல்கிறார்கள்” என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இதழில் “பலமுறை ஐ.வி.எப் சிகிச்சை செய்து தோல்வி அடைந்த பெண்கள் மீண்டும் கருத்தரிப்பது எப்படி?” என்பது குறித்த கேள்விகளுக்கு உலக பாலியல் மருத்துவர்கள் சங்க ஆலோசனைக்குழு துணைத்தலைவரும், பிரபல குழந்தையின்மை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கே.எஸ்.ஜெயராணி காமராஜ் பதில் அளிக்கிறார்.

கேள்வி: பலமுறை IVF சிகிச்சையில் கருத்தரிக்காத  பெண்கள் மீண்டும் கருத்தரிப்பது எப்படி?

பதில்: “IVF அதாவது டெஸ்ட் டியூப் பேபி செயற்கை கருத்தரிப்பு” சிகிச்சை பலமுறை செய்தும் எனக்கு குழந்தை கிடைக்கவில்லை. இந்த செயற்கை கருத்தரிப்பு  முறை வெற்றிகரமாக அமைவதற்கு ஒரு விளக்கம் தேவை? என பல தம்பதியர்கள் கேட்கிறார்கள்.செயற்கை கருத்தரிப்பு  முறை மூலமாக கருத்தரிக்க முடிவு எடுத்தபின் கவனிக்க வேண்டிய விஷயங்கள் வருவன.

1. நீங்கள் தேர்ந்தெடுக்கும் செயற்கை கருத்தரிப்பு மையம் IVF சிகிச்சைக்கு தேவையான எல்லா வசதிகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். 2. சிறந்த திறமை வாய்ந்த அனுபவம் பெற்ற மருத்துவரால் நடக்கக்கூடிய மையமாக இருக்க வேண்டும். 3. செயற்கை கருத்தரிப்பு மையத்தில் தகுதி வாய்ந்த Gynaecologist பெண் மருத்துவ சிகிச்சை நிபுணர் இருக்க வேண்டும். அதிலும் முதுகலை பட்டம் பெற்ற, அனுபவம் வாய்ந்த பல சுழற்சிகள் (Cycles) செய்த மருத்துவரை தேர்தெடுப்பது தான் உங்கள் வெற்றிக்கு காரணமாக அமையும். 4. அந்த மையத்தில் Andrologist ஒருவர் இருக்க வேண்டும். 5. ஒரு எம்பரோலொஜிஸ்ட்டும் (கருமுட்டையை எடுத்து கருவாக்கம் செய்யும் முறையில் தேர்ச்சி பெற்றவர்கள்) இருக்க வேண்டும். 6. சிறந்த தகுதி வாய்ந்த மருத்துவர்களால் நடத்தும் நிறுவனமாக இருக்க வேண்டும்.

அந்த செயற்கை கருத்தரிப்பு மையம் ICMR (இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரீசெர்ச்) - ன் படி தேர்ச்சி பெற்ற மருத்துவ மையமாக இருக்க வேண்டும். ICMR வழிகாட்டுதல்கள் படி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். NARI-ல் அனுமதி  பெற்றிருக்க வேண்டும் மேலும் அங்கு நடக்கும் அனைத்து  செயற்கை கருத்தரிப்பு முறைகளும் உதாரணமாக IVF, இக்ஸி மற்றும் TESA, PESA, MESA போன்ற முறைகள் குறித்து அரசுக்கு மாதம் ஒருமுறை அறிக்கை செய்கிற மையமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மையத்தை தேர்ந்தெடுப்பதன் மூலமாக உங்களுக்கு வெற்றியின் சதவீதத்தை அதிகப்படுத்தலாம். சில நேரங்களில் இம்மையங்களில் IVF-ஐ தொகுதி தொகுதியாக 3 மாதத்திற்கு ஒருமுறை எல்லா IVF தம்ப தியர்களையும் சேர்த்து வைத்து செய்வார்கள். இதுமாதிரி செய்யும்போது வெற்றி விகிதம் குறைவாக இருக்கும். இந்தமாதிரி செய்யும் போது பலத்தரப்பட்ட நோயாளிகளை ஏமாற்றுவது போல் இருக்கும்.  நிறைய நேரங்களில் நிறைய மருந்துகள் கொடுத்து எல்லா நோயாளிகளுக்கும் ஒரே நேரத்தில் மாதவிலக்கு ஏற்படுத்தி  ஓரே நேரத்தில் கருமுட்டைகளை உருவாக்க வைத்து செய்யும் போது வெற்றியின் விகிதம் குறைவாகிறது.

இதை தொடந்து செய்யக்கூடிய மையங்களில் IVF ஆய்வுக்கூடம் என்பது முக்கியமானதாகும். அது எப்பவும் ஒரு நல்ல நிலையில் செயல்பட்டு கொண்டிருக்கும் போது தான் வெற்றியின் விகிதம் அதிகமாக இருக்கும். 1.மூன்று மாதத்திற்கு ஒருமுறை செய்யும்போது இந்த வெற்றி விகிதம் குறைகிறது. 2. இதனால் தொடர்ச்சியாக IVF செய்து கொண்டிருக்கும் மையத்தில் செய்யும் போது வெற்றி விகிதம் அதிகமாகிறது. 3. அடுத்து நீங்கள் முக்கியமாக கவனிக்கவேண்டியவை எதுவென்றால் ஒரு கருவாக்க மையத்தில் எவ்வளவு வெற்றிவிகிதம் கொடுக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.  நிறைய மையங்களில் வெற்றியின் விகிதத்தை அதிகப்படுத்தி காண்பிக்கிறார்கள்.  

ஒரு மையத்தை தேர்தெடுக்கும் போது மேற்கண்ட விஷயங்கள் இருக்கிறதா? என்பதை பார்த்து தேர்தெடுக்கும் போது வெற்றி விகிதம் அதிகமாகும்.
கே:உங்களுக்கு நிறைய முறை தோல்வி ஆன நிலையில் அடுத்த முறை எப்படி வெற்றிகரமாக செய்வது? ஒருமுறை IVF செய்து தோல்வி அடைந்தால் இக்ஸி செய்யலாம். ஏனென்றால் IVF செய்யும்போது சில நேரங்களில் நல்ல கரு உருவாவது குறைவாக இருக்கும். 10 கருமுட்டையை எடுத்துக்கொள்வோமானால் அதில் 6 அல்லது 7 கருத்தரிக்கும். இக்ஸி செய்யும்போது 10 எடுத்துக்கொள்வோமானால் 9 கருவாகுவதற்கு கூட வாய்ப்புகள் அதிகம். அதிகமாக கருமுட்டைகளை உருவாக்கி நல்ல கரு உருவாகும்போது  அந்த கருவை நன்றாக வளர வைத்து 3 நாள் கருவிற்கு பதிலாக 5 நாள் (Blastocyst) என்ற அளவுக்கு வளர வைத்து  கர்ப்பப்பையில் பதியம் செய்யும்போது கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக அமையும்.

நீங்கள் இரண்டு முறை செய்தும் தோல்வி ஆனால் அந்த கருவை Blastocyst முறையில் வைக்கலாம், அல்லது லேசர் அசிடேட் ஹாட்சிங் அதாவது லேசர் முறை மூலமாக அசிஸ்டெட் ஹாட்சிங் செய்தும் அந்த கரு ஒட்டி வளரவில்லையானால் இதை Implantation failure என்று சொல்வார்கள்.  இதற்கு கர்ப்பப்பையில் நல்ல முறையில் வளர்ந்தால்தான் கரு ஒட்டி வளர்வதற்கான  வாய்ப்புகள் அதிகம். வடபழனி ஆகாஷ் மருத்துவமனையில் “கடந்த ஆண்டு மட்டும் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் IVF சிகிச்சை மூலமாக பிறந்துள்ளன” என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்