SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடன்குடி அனல்மின் நிலையம் அமைக்க மின்வாரியத்துக்கு மத்திய அரசு ரூ.10,453 கோடி கடன் வழங்குகிறது

2018-01-13@ 00:51:19

சென்னை: உடன்குடி அனல்மின் நிலையம் அமைக்க தமிழக மின் வாரியத்துக்கு மத்திய அரசு ரூ.10,453 கோடி கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.தமிழக மின்வாரியம், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அனல்மின் நிலையம் அமைக்க உள்ளது. அதில் இரண்டு நிலைகளில் தலா 660 மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசின் பெல் நிறுவனம்தான் கட்டுமான பணியை மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில், உடன்குடி அனல்மின் நிலையம் அமைக்க தமிழக மின்வாரியத்துக்கு மத்திய ஊரக மின்மயமாக்கல் கழகம் ரூ.10,453 கோடி கடன் வழங்க முடிவு செய்தது.

இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் ஊரக மின்மயமாக்கல் கழகத்தின் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. நிகழ்ச்சியில், தமிழக மின்வாரிய முதன்மை செயலாளர் விக்ரம்கபூர், சேர்மன் சாய்குமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: கடந்த ஆறு ஆண்டில் தமிழக மின்வாரியம் அனல் மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் அபரீத வளர்ச்சி பெற்றுள்ளது.

மின்வெட்டு பிரச்னை சரிசெய்யப்பட்டு ஜூன் 2015 முதல் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2013-14ல் ரூ.13,985 கோடியாக இருந்த மின்வாரியத்தின் நஷ்டம் 2016-17ல் ரூ.1,400 கோடியாக குறைந்துள்ளது. தற்போது மின்தேவை நாள் ஒன்றுக்கு 14,000 மெகாவாட் ஆக உள்ளது. இது 15,500 மெகாவாட் ஆக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. சென்னையில் பீக் அவர்சில் அதிகபட்சம் கடந்த 2015ல் 3,332 மெகாவாட் மின்தேவை இருந்தது. 2023க்குள் மின்தேவை 23,350 மெகாவாட் ஆக அதிகரிக்கும். அதற்கேற்ப உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த வகையில்தான் இன்று இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கடனுக்கான வட்டியை குறைக்கும்படி வேண்டுகோள் வைக்கிறேன். 3 ஆண்டிற்குள் உடன்குடி நிலையம் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். சேர்மன் சாய்குமார் பேசுகையில், தமிழக மின்துறையின் வளர்ச்சி ஊரக மின்மயமாக்கல் கழகம் தொடர்ந்து கடனுதவி அளித்து உதவி புரிய வேண்டும். தற்போது உடன்குடி திட்டத்துக்கான கடன் தொகையை விரைவில் ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த 5 ஆண்டிற்குள் 7,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

  • madurai_meenut11

    மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

  • berlin_bomb_war

    இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

  • 10schooldata

    10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

  • governor_palace11

    பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்